அவந்திபோரா தாக்குதலில் மூளையாக இருந்த தீவிரவாதி கொல்லப்பட்டான்.. இந்திய ராணுவம் அதிரடி
ஜம்மு காஷ்மீரில் அவந்திபோரா தாக்குதலில் மூளையாக இருந்த தீவிரவாதி இந்திய ராணுவத்தால் கொல்லப்பட்டு இருக்கிறான்.
காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரில் அவந்திபோரா தாக்குதலில் மூளையாக இருந்த தீவிரவாதி இந்திய ராணுவத்தால் கொல்லப்பட்டு இருக்கிறான்.
காஷ்மீர் மாநிலம் புல்வாமா, அவந்திபோரா, உரி பகுதிகளில் கடந்த சில நாட்களாக இந்திய ராணுவம் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது. இங்கு அடிக்கடி தீவிரவாதிகள், பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் இன்று காலை மீண்டும் அவந்திபோரா ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இதற்கு ராணுவ தரப்பும் பதிலடி கொடுத்து வருகிறது.
தற்போது அவந்திபோராவில் நடந்த மோதலில் தீவிரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டு இருக்கிறான். தீவிரவாதி முப்தி வாகர் இந்திய ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டான்.
ஜெய்ஷ் இ முகம்மது இயக்கத்தின் செயல்பாட்டு தளபதியாக இவன் இருந்தான். இவன்தான் அவந்திபோரா தாக்குதலில் மூளையாக இருந்தான் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications