விரைவில் இந்தியாவில் அதிபயங்கர நிலநடுக்கம் ஏற்படும்: தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் எச்சரிக்கை

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஏற்கனவே நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள இமய மலை பகுதி மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் விரைவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட உள்ளதாக மத்திய அரசின் தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த ஆண்டு நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம், தற்போது மணிப்பூரில் ஏற்பட்ட நிலநடுக்கம் ஆகியவற்றால் பூமிக்கு அடியில் உள்ள டெக்டானிக் பிளேட்ஸ் எனப்படும் பூமியின் அடுக்குகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் இமய மலை பகுதியில் விரைவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்படும். குறைந்தது 4 முறையாவது பயங்கர நிலநடுக்கம் ஏற்படும். அது ரிக்டர் அளவுகோலில் 8.2 அல்லது அதற்கும் அதிகமாக இருக்கும் என்று மத்திய அரசின் கீழ் செயல்படும் தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Big quake coming, warn MHA experts

விரைவில் ஏற்பட உள்ள பயங்கர நிலநடுக்கத்தால் நேபாளம், பூட்டான், மியான்மர் மற்றும் இந்தியாவில் பாதிப்பு அதிக அளவில் இருக்கக்கூடும் என்று தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவன தலைவர் சந்தோஷ் குமார் தெரிவித்துள்ளார்.

பீகார், உத்தர பிரதேசம் மற்றும் டெல்லியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது. வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் மலையில் உள்ள மாநிலங்களும் பயங்கர நிலநடுக்கம் ஏற்படும் இடத்தில் அமைந்துள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து நிபுணர்கள் கூறுகையில்,

தற்போதுள்ள சூழலில் குறைந்தது 4 முறையாவது பெரிய அளவில் நிலநடுக்கம் ஏற்படும். விரைவில் நிலநடுக்கம் ஏற்படாவிட்டால் டெக்டானிக் பிளேட்ஸ் அழுத்தம் அதிகரித்து பேரழிவை ஏற்படுத்தும் வகையில் நிலநடுக்கங்கள் ஏற்படும் என்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+