இந்தியாவில் நான்கில் ஒருவர் தீண்டாமையை கடைபிடிக்கிறார்: ஆய்வில் அதிர்ச்சித் தகவல்!
டெல்லி: இந்தியாவிலிருந்து தீண்டாமை முற்றிலுமாக அளிக்கப்பட்டு விட்டதாக ஒரு பக்கம் கூறினாலும், மறுபக்கம் இன்னமும் நான்கில் ஒருவர் தீண்டாமையைக் கடைப்பிடிப்பதாக சமீபத்திய ஆய்வு ஒன்று அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.
தலைநகர் டெல்லியில் இயங்கிவரும் தேசிய பயன்பாட்டு பொருளாதார ஆய்வுசிக் கழகம் ( National Council of Applied Economic Research - NCAER ) என்னும் தன்னார்வ அமைப்பு சார்பில், தீண்டாமை குறித்து நாடு தழுவிய அளவில் ஆய்வு ஒன்று மேற்கொள்ளப் பட்டது.

விழிப்புணர்வு, சட்டம், கல்வி மற்றும் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியால் தீண்டாமை களையெடுக்கப்பட்டு விட்டதாக கூறப்பட்டு வருவதை இல்லை என்கிறது இந்த ஆய்வு.
கடந்த 2011- 12 ஆம் ஆண்டிற்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், பொதுமக்களிடம் இரண்டு கேள்விகள் கேட்கப்பட்டது.
அதாவது, 1. உங்களது வீடுகளில் தீண்டாமை நடைமுறையில் உள்ளதா? 2. உங்கள் வீட்டு சமையல் அறைக்குள் பட்டியல் இனத்தவர் நுழையவும், பாத்திரங்களைப் பயன்படுத்தவும் அனுமதிப்பீர்களா? என ஆய்வில் கலந்து கொண்டவர்களிடம் கேட்கப்பட்டது.
இதற்கு ஆய்வில் பங்கெடுத்த நான்கில் ஒருவர், தீண்டாமையைக் கடைபிடிப்பதாக ஒப்புக் கொண்டுள்ளனர்.
இந்த ஆய்வின் முழு விபரமும் தொகுப்பாக அடுத்தாண்டு வெளியிடப்படும் எனத் தெரிகிறது, தற்போதைக்கு ஆய்வுத் தகவல்கள் புள்ளி விபரங்களாக வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி சாதி அடிப்படையில் 27 சதவீதத்தினர் தீண்டாமை இருப்பதை உறுதி செய்து உள்ளனர்.
மாநிலவாரியாகப் பார்த்தால் வடமாநிலங்களில், மத்தியப் பிரதேசம் 53 சதவீதமும், உத்தரப் பிரதேசத்தில் 43 சதவீதமும்,இமாச்சலில் 50 சதவீதமும், சத்தீஸ்கரில் 48 சதவீதமும்,ராஜஸ்தான் மற்றும் பீகாரில் 47 சதவீதமும், உத்தரகாண்டில் 40 சதவீதமும் `தீண்டாமை`இருந்ததாக இந்த ஆய்வு தெரிவிக்கின்றது.
இதேபோல், தென் மாநிலங்களில் ஆந்திரப்பிரதேசத்தில் 10 சதவீதம் மட்டுமே தீண்டாமை உள்ளதாக கூறும் இந்த ஆய்வு, மேற்கு வங்காளத்தில் ஒரு சதவீதமும்,கேரளாவில் 2 சதவீதமும் தீண்டாமை இருப்பதாக தெரிய வந்துள்ளது.
இந்த ஆய்வு தொடர்பாக கருத்து தெரிவித்து உள்ள தலைமை ஆராய்ச்சியாளர் டாக்டர் அமித் தோரட், "சமூக அடிப்படையில் சாதிய உணர்வு, மக்களோடு ஒன்றி கலந்து உள்ளது. சமுதாயத்தில் இருந்து தீண்டாமையினை அகற்றுவது கடினமே" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த ஆய்வின் மூலம் கல்வி பெற்ற மக்களிடையே சாதியின் தாக்கம் குறைந்துள்ளதையும், பணம் படைத்தவர்களிடமே தீண்டாமையை செயல்படுத்தும் எண்ணம் மேலோங்கி இருப்பதையும் அமித் சுட்டுக் காட்டியுள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications