தேர்தலுக்கு முன்பே "இந்தியா" கூட்டணியில் வெடித்த மோதல்? பீகாரில் மிக பெரிய சிக்கலில் தேஜஸ்வி யாதவ்!

Subscribe to Oneindia Tamil

பாட்னா: பீகார் மாநிலத்தில் இன்னும் சில வாரங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் என்டிஏ கூட்டணியின் தொகுதிப் பங்கீடு இறுதியாகிவிட்டது. இருப்பினும், அங்கு "இந்தியா" கூட்டணியில் இழுபறி தொடர்ந்து வருகிறது. காங்கிரஸ்- ஆர்ஜேடி என இரு கட்சித் தலைவர்களும் தீவிரப் பேச்சுவார்த்தை நடத்தி வரும் போதிலும் இன்னும் தொகுதிப் பங்கீட்டில் எந்தவொரு உடன்பாடும் எட்டப்படவில்லை.

பீகாரில் அடுத்த மாதம் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. அங்கு நிதிஷ் குமார் தலைமையிலான பாஜக- ஜேடியு கூட்டணிக்கு எதிராக ஆர்ஜேடி- காங்கிரஸ் கூட்டணி போட்டியிடுகிறது. இந்தத் தேர்தலில் முதலில் என்டிஏ மற்றும் இந்தியா கூட்டணி என இரு தரப்பிலும் கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி இருந்தது.

Bihar election 2025 INDIA bloc Seat Sharing Standoff continues as all parties asking more seats

சிக்கல்

இருப்பினும், நேற்று முன்தினம் தான் என்டிஏ கூட்டணியில் தொகுதிப் பங்கீடு ஒருவழியாக இறுதியானது. ஆனால் இந்தியா கூட்டணியில் இன்னும் தொகுதிப் பங்கீட்டு இறுதி செய்யப்படவில்லை. முதற்கட்டத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் முடிவடைய இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், இன்னும் தொகுதிப் பங்கீடு கூட முடியாதது சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

பீகாரில் மகா பந்தன் என்ற பெயரில் இந்தியா கூட்டணி களமிறங்குகிறது. இதில் பல்வேறு கட்டங்களாகப் பேச்சுவார்த்தை நடந்த போதிலும் இன்னும் ஆர்ஜேடி மற்றும் காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு இறுதியாகவில்லை. இரு கட்சிகளும் தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளன. இதனால் இழுபறி தொடர்ந்தே வருகிறது.

காங்கிரஸ்

முதலில் காங்கிரஸ் கட்சி கடந்த 2020ல் போட்டியிட்டதை போலவே 70 இடங்களைக் கோரியுள்ளது. பேச்சுவார்த்தைக்குப் பிறகு 61-63 இடங்களுக்கு ஓகே சொல்லும் நிலைக்கு வந்துவிட்டது. இருப்பினும், 2020ல் காங்கிரஸ் 70 இடங்களில் போட்டியிட்டு 19 இடங்களில் மட்டுமே வென்றிருந்தது. இதனால் அவ்வளவு இடங்களைக் கொடுக்க ஆர்ஜேடி தயங்குகிறது. 2020ல் ஆர்ஜேடி 75 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருந்தது. இருப்பினும், அப்போது காங்கிரஸ் மிகக் குறைந்த சீட்களில் வென்றதே ஆர்ஜேடி ஆட்சி அமைக்க முடியாமல் போகக் காரணமாக இருந்தது.

வெடித்த மோதல்?

இதில் இரு கட்சிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது போலவே தெரிகிறது. ஏனென்றால் நேற்று தேஜஸ்வி யாதவ் டெல்லியில் கூட்டணி பேச்சுவார்த்தைகளை நடத்தி வந்தார். ஆனால், பாட்னாவில் லாலு பிரசாத் யாதவ் தனக்கு விஸ்வாசமான நபர்களுக்குப் பல தொகுதிகளில் போட்டியிட வாய்ப்பு தருவதாகச் சொன்னதாகத் தகவல்கள் வெளியானது.. காங்கிரஸுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலேயே ஆர்ஜேடி இதைச் செய்துள்ளது. அதேநேரம் தேஜஸ்வி நேற்றிரவு பாட்னா வந்தவுடன், லாலு பிரசாத் யாதவ் சொன்னதாக வெளியான தகவல்களில் உண்மை இல்லை என தெளிவுபடுத்தினார்.

இது மட்டுமில்லை.. அந்தக் கூட்டணியில் உள்ள சிறிய கட்சிகளான முகேஷ் சாஹ்னியின் விகாஷீல் இன்சான் கட்சி (விஐபி) மற்றும் சிபிஐ (எம்-எல்) போன்ற சிறிய கட்சிகளும் கூட அதிக இடங்களைக் கேட்கிறதாம். இதில் விஐபி கட்சி 40 இடங்களைக் கோரியுள்ளது. இருப்பினும், அக்கட்சிக்கு அதிகபட்சம் 12 இடங்கள் மட்டுமே கிடைக்க வாய்ப்புள்ளது. அதேநேரம், இந்த தேர்தலில் வென்றால் தனக்குத் துணை முதல்வர் பதவி வேண்டும் என்றும் விஐபி தலைவர் சஹானி கோரியுள்ளார்.

தேஜஸ்வி யாதவ்

மேலும், சிபிஐ எம்எல் கட்சியும் 35 இடங்கள் வரை கேட்கிறதாம். 2020 தேர்தலில் சிபிஐ எம்எல் 19 இடங்களில் போட்டியிட்ட 12 இடங்களில் வென்றிருந்தது. இதைச் சுட்டிக்காட்டி அதிக இடங்கள் தேவை என்று சிபிஐ எம்எல் வலியுறுத்தியது. இப்படி எல்லாக் கட்சிகளும் அதிக இடங்களைக் கேட்பதால் தேஜஸ்வி யாதவ் மிகப் பெரிய சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+