ஜீரோ சீட்.. ஆனாலும் குட்டையை குழப்பிவிட்ட பிரசாந்த் கிஷோர்! பீகாரில் அடி விழுந்தது தேஜஸ்விக்கு தான்

Subscribe to Oneindia Tamil

பாட்னா: பீகார் தேர்தல் முடிந்துள்ள நிலையில், நேற்று வெளியான எக்ஸிட் போல் முடிவுகளில் சில விஷயங்கள் தெளிவாகத் தெரிந்தது. குறிப்பாக பிரசாந்த் கிஷோர் கட்சி அங்கு 10 இடங்களைக் கூட வெல்லாது என்றே பெரும்பாலான எக்ஸிட் போல் முடிவுகள் கூறினாலும் கூட அது தேர்தலில் மிகப் பெரிய தாக்கத்தையே ஏற்படுத்தியதாகத் தெரிகிறது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்!

பீகார் தேர்தலில் முதல்முறையாகத் தேர்தல் ஆலோசகரான பிரசாந்த் கிஷோர் போட்டியிட்டார். ஜன் சூராஜ் என்ற பெயரில் கட்சியை ஆரம்பித்த அவர் பீகாரில் களமிறங்கினார். எந்தக் கட்சி உடனும் கூட்டணி அமைக்காமல் அவர் தனித்துப் போட்டியிட்டார். மேலும், பிரச்சாரத்தின்போதே ஒன்று ஆட்சியைப் பிடிப்போம் அல்லது மிக மோசான தோல்வியை எதிர்கொள்வோம் என்றே சொல்லி பிரச்சாரம் செய்தார்.

Bihar election Exit Polls Prashant Kishor will win almost zero seats but will create huge impact

எக்ஸிட் போல்

இந்தச் சூழலில் தான் பீகாரில் இரண்டு கட்ட வாக்குப்பதிவு முடிந்து, நேற்று மாலை எக்ஸிட் போல் சர்வேக்கள் வெளியானது. அதில் கிட்டத்தட்ட எல்லா சர்வேக்களும் சொல்வது ஒன்றைத் தான்.. பாஜக- ஜேடியு கூட்டணி பீகாரில் ஆட்சியைத் தக்க வைக்கும்.. டைனிக் பாஸ்கர், பீப்பிள்ஸ் பல்ஸ், ஜேவிசி, பி-மார்க்கு, சாணக்யா உட்பட் எல்லா சர்வேக்களும் சொல்வது இதை தான்! எதிர்க்கட்சி கூட்டணி தோல்வி அடையும் என்றும் ஜன் சூராஜ் கட்சிக்கு மிகப் பெரிய அதிர்ச்சியும் கிடைக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

பிரசாந்த் கிஷோர் கட்சி

பிரசாந்த் கிஷோர் கட்சி எங்கு ஓரிரு தொகுதிகளைத் தவிர்த்துக் கிட்டத்தட்ட எல்லாத் தொகுதிகளிலும் போட்டியிட்டது. இருப்பினும், எல்லா சர்வேக்களும் அவர்கள் 5 இடத்தை கூட தாண்ட மாட்டார்கள் என்றே கூறியுள்ளன. பிரசாந்த் கிஷோர் கட்சி 0-5 இடங்களில் வெல்லும் என பீப்பிள்ஸ் பல்ஸ் கணித்துள்ளது.

அதேபோல டைனிக் பாஸ்கர் (0-3 இடங்கள்) பீப்பிள்ஸ் இன்சைட் (0-2 இடங்கள்), மேட்ரிஸ் (0-2 இடங்கள்), ஜேவிசி (0-1 இடம்), பி-மார்க்கு (1-4 இடங்கள்), டி.வி. ரிசர்ச் (2-4 இடங்கள்) என எல்லாமே 5க்கும் குறைவான சீட்களையே கொடுத்துள்ளது. சாணக்யா மற்றும் டிஐஎஃப் ரிசர்ச் பிகே கட்சி ஒரு இடத்திலும் வெல்லாது என கூறியுள்ளது. ஜன் சூராஜ் கட்சி தேர்தலில் அதிக இடங்களை வெல்லாவிட்டாலும் கூட கணிசமான வாக்குகளைப் பெறும் என்றே எக்ஸிட் போல் முடிவுகள் கூறுகின்றன.

வெற்றி தோல்வியை மாற்றியது

இதுவே தேர்தல் முடிவுகளில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றே தெரிகிறது. தேர்தலுக்கு முன்பே ஜன் சூராஜ் கட்சி வாங்கும் வாக்குகள் தான் வெற்றி- தோல்வியைத் தீர்மானிக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், அது ஆளும் என்டிஏ கூட்டணிக்குச் சாதகமாகப் போகுமா அல்லது எதிர்க்கட்சி கூட்டணிக்குச் சாதகமாகப் போகுமா என்பதில் கேள்வி இருந்தது. ஆனால், எக்ஸிட் போல் முடிவுகளை வைத்துப் பார்த்தால் அது என்டிஏ கூட்டணிக்கு ஆதரவாகவே மாறி இருக்கிறது.

இந்தியா கூட்டணி

பிரசாந்த் கிஷோர் பெறும் பெரும்பாலான வாக்குகள் "இந்தியா" கூட்டணி வாக்குகள் என்பதால் அது அவர்களை மோசமாகப் பாதிக்கிறது. என்டிஏ கூட்டணியின் வாக்குகள் பிரசாந்த் கிஷோருக்கு மிகக் குறைவாகவே வருகிறது.. அதாவது பீகாரில் நிதிஷ் குமார் ஆட்சிக்கு எதிரான வாக்குகள், இந்தியா கூட்டணிக்கும் பிரசாந்த் கிஷோரின் கட்சிக்கும் இடையில் பிரிகிறது. இது எதிர்க்கட்சி கூட்டணிக்குப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்று அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும், ஜன் சூராஜ் கட்சி ஆரம்பித்து ஒரு வருடம் மட்டுமே ஆகிறது. பீகார் போன்ற ஒரு மாநிலத்தில் மக்கள் புதிய கட்சியை அவ்வளவு சீக்கிரம் ஏற்றுக் கொள்வது ரொம்பவே கடினம். இதன் காரணமாகவே பெரும்பாலான மக்களின் ஆதரவு பிரசாந்த் கிஷோருக்கு கிடைக்கவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+