"நேபாளம் போல.." ஆர்ஜேடி சொன்ன வார்த்தை.. பீகாரில் உச்சக்கட்ட பதற்றம்! மாநிலம் முழுக்க பள்ளிகள் மூடல்
பாட்னா: பீகாரில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில், அங்கு அனைத்துப் பள்ளிகளும் மூடப்பட்டன. பாதுகாப்பு நடவடிக்கைகளும் பலப்படுத்தப்பட்டன. வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்தால் வன்முறை வெடிக்கும் என ஆர்ஜேடி எமஎல்சி சுனில் குமார் சிங் கூறியிருந்த நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்குப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.
பீகார் மாநிலத்தில் இன்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை தீவிரமாக நடந்து வருகிறது. அங்கு நவம்பர் 6 மற்றும் 11 என இரு கட்டங்களாகத் தேர்தல் நடைபெற்ற நிலையில், இப்போது வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. இதில் தொடக்கம் முதலே பாஜகவின் என்டிஏ கூட்டணி தான் முன்னிலையில் உள்ளது. அந்தக் கூட்டணியில் உள்ள ஆர்ஜேடி மற்றும் பாஜக என இரண்டுமே அதிக இடங்களைப் பெறுவது போலவே தெரிகிறது.

சுனில் குமார்
மறுபுறம் இந்தியா கூட்டணிக்கு இந்த முறையும் பின்னடைவு தான். அதில் தேஜஸ்வி கட்சி அதிக இடங்களைப் பெற்றாலும் கூட காங்கிரஸ் குறைந்த தொகுதிகளிலேயே முன்னிலையில் இருக்கிறது. இதற்கிடையே ஆர்ஜேடி கட்சியின் மூத்த தலைவரும் லாலு பிரசாத் குடும்பத்தினரின் நெருங்கிய நண்பருமான சுனில் குமார் சிங் கூறிய சில கருத்துகள் அங்குப் பதற்றத்தை ஏற்படுத்தியது.
பதற்றம்
அதாவது வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்தால் நேபாளத்தை போன்ற வன்முறை வெடிக்கும் என்று சுனில் குமார் பேசியிருந்தார். இதனால் அங்கு மாநிலத்தில் பதற்றம் ஏற்பட்டது. நேபாளத்தில் வன்முறை போராட்டங்களால் என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும். அப்படியிருக்கும் போது லாலுவின் நெருங்கிய தொடர்பில் இருப்பவர் இதுபோல கூறியது பரபரப்பைக் கிளப்பியது. இதையடுத்து தேவையான சட்டம் ஒழுங்கைக் காரணம் காட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பீகார் மாவட்ட ஆட்சியர்கள் எடுத்தனர்.
பள்ளிகள் மூடல்
பாட்னாவில் அனைத்து அரசு, அரசு சாரா மற்றும் தனியார் பள்ளிகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.. பள்ளிகள் மட்டுமின்றி பயிற்சி மையங்கள் உள்ளிட்ட அனைத்துக் கல்வி நிறுவனங்களையும் மூட உத்தரவிட்டுள்ளனர். முசாபர்பூர், நவாடா, கிஷன்கஞ்ச், பூர்ணியா, கதிகார் என மாநிலத்தில் பெரும்பாலான இடங்களில் பள்ளிகளை மூட அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.
இது தொடர்பாக முசாபர்பூர் ஆட்சியர் சுப்ரத் குமார் சென், "வாக்கு எண்ணிக்கையின் போது, பள்ளிப் பேருந்துகள் மற்றும் பயிற்சி நிறுவன வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்படலாம். மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது" என்று அவர் கூறினார்.
என்ன பேசினார்
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய சுனில் சிங், "அதிகாரிகள் வாக்கு எண்ணிக்கையில் மோசடி செய்தால்.. நேபாளம், பங்களாதேஷ் மற்றும் இலங்கை நாடுகளில் நடந்தது போல் பீகார் வீதிகளில் போராட்டங்கள் வெடிக்கும். அப்போது நிலைமை அரசின் கட்டுப்பாட்டை மீறிவிடும்.. அதிகாரிகள் பொறுப்புடன் செயல்பட வேண்டும்.. மக்கள் இம்முறை மிகவும் விழிப்புடன் இருக்கிறார்கள், அதற்கேற்பப் பதிலளிப்பார்கள்.
பகீர் கருத்து
2020 சட்டமன்றத் தேர்தல்களில் என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும்.. திட்டமிட்டுப் பல மணி நேரம் வாக்கு எண்ணிக்கையை நிறுத்தினார்கள். அதன்பிறகு ஆர்ஜேடி வேட்பாளர்கள் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. மீண்டும் இந்த முறை அப்படி நடக்கக்கூடாது. மக்களும் அப்படி நடக்க விட மாட்டார்கள். மக்கள் இந்த முறை மாற்றத்திற்காக வாக்களித்துள்ளனர். தேஜஸ்வியை முதல்வராக்கவே இந்த முறை மக்கள் வாக்களித்துள்ளனர்" என்றார்.
சுனில் சிங்கின் இந்தக் கருத்துக்களுக்கு ஜேடியு செய்தித் தொடர்பாளர் நீரஜ் குமார் கடும் கண்டனம் தெரிவித்தார். இது தொடர்பாக அவர், "பீகாரில் என்டிஏ அரசு சட்ட ஒழுங்கை நிலைநாட்டியுள்ளது. யாராவது சட்டத்தைத் தங்கள் கைகளில் எடுக்க முயன்றால், சட்டம் தனது கடமையைச் செய்யும்.. தேர்தல் ஆணையம் அனைத்து நிகழ்வுகளையும் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது" என்றும் தெரிவித்தார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications