ட்விஸ்ட் கொடுக்க ரெடியாகும் பீகார்... எக்ஸிட் போல் முடிவுகளுக்கு "ஒன்இந்தியா" உடன் இணைந்திருங்கள்!
பாட்னா: பீகார் மாநிலத்தில் இரண்டாம் மற்றும் கடைசிக் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் காலை முதலே பீகார் மக்கள் ஆர்வமாக வாக்களித்து வருகிறார்கள். இதற்கிடையே இன்று மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், அதன் பிறகு வரிசையாக எக்ஸிட் போல் முடிவுகள் வெளியாகும். எக்ஸிட் போல் முடிவுகளை நமது ஒன்இந்தியா தளத்தில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்!
பீகார் மாநிலத்தில் இரு கட்டங்களாகச் சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது.. கடந்த நவம்பர் 6ம் தேதி நடைபெற்ற முதற்கட்ட வாக்குப்பதிவில் 121 தொகுதிகளுக்குத் தேர்தல் நடந்தது. இன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் 122 தொகுதிகளில் தேர்தல் நடந்து வருகிறது. காலை முதலே பொதுமக்கள் ஆர்வமாகத் தேர்தலில் வாக்களித்து வருகிறார்கள்.

பீகார் தேர்தல்
இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் நிறைவடையும் நிலையில், இப்போது பொதுமக்களின் பார்வை எக்ஸிட் போல் முடிவுகளை நோக்கித் திரும்பியுள்ளது. வாக்குப்பதிவு முழுமையாக முடியும் வரை எக்ஸிட் போல் முடிவுகளை வெளியிடக் கூடாது என்று தேர்தல் ஆணைய ரூல்ஸில் மிகத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு 6 மணி வரை நடைபெறும் நிலையில், அதன் பிறகு எக்ஸிட் போல் முடிவுகள் வெளியாகும்.
இன்று நடைபெறும் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு 20 மாவட்டங்களில் 122 தொகுதிகளில் தேர்தல் நடக்கிறது. கயா, நவாடா, ஜமுய், பாகல்பூர், பூர்ணியா போன்ற முக்கிய தொகுதிகளும் வாக்குப்பதிவு நடக்கிறது. அனைத்துக் கட்சிகளுமே நேற்று முன்தினம் வரை இறுதிக்கட்டப் பிரச்சாரத்தைத் தீவிரமாக நடத்தி வந்த நிலையில், இன்று காலை முதலே வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
ஏன் முக்கியம்
எப்போதுமே தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகளைக் காட்டிலும், எக்ஸிட் போல் எனப்படும் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் அதிகக் கவனம் பெறும். ஏனென்றால் தேர்தலுக்கு முந்தைய சர்வேக்களில் பல விஷயங்கள் தவறாகப் போக வாய்ப்பு இருக்கிறது.
அதேநேரம் வாக்களித்துவிட்டு வெளியே வந்த மக்களிடம் கருத்து கேட்டு இந்த எக்ஸிட் போல் சர்வே நடத்தப்படுகிறது. எனவே, எக்ஸிட் போல்கள் பெரும்பாலும் வாக்காளர்கள் மனநிலையை அப்படியே பிரதிபலிப்பதாகவே இருக்கும். மேலும், தேர்தல் முடிவுகளுடன் ஒத்துப் போவதாகும் இருக்கும் என்பதால் எக்ஸிட் போல் முடிவுகள் கவனம் பெறும்.
எப்போது வெளியாகும்
இன்றைய தினம் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அது முடிந்தவுடன் இரவு 6:30 மணிக்கு மேல் எக்ஸிட் போல் முடிவுகள் வெளியாகும். ஆக்சிஸ் மை இந்தியா, சிவோட்டர்ஸ், ஜான்கி பாத், டுடே சாணக்கியா எனப் பல்வேறு ஏஜென்சிக்கள் எக்ஸிட் போல் முடிவுகளை வெளியிடும். அதை நமது ஒன்இந்தியா தளத்திலும் நொடிக்கு நொடி துல்லியமாகப் பார்க்கலாம்!
டிரெண்ட் தெரியும்
மக்கள் எப்படி வாக்களித்துள்ளனர் என்ற டிரெண்டை இந்த எக்ஸிட் போல் ஓரளவுக்குக் காட்டிவிடும். இருப்பினும், இவை எப்போதும் துல்லியமானதாக இருக்காது. மேலும், இதை இறுதி முடிவுகளாகவும் கருத முடியாது. சமீபத்திய ஆண்டுகளில், சில எக்ஸிட் போல் முடிவுகள் தவறாகவும் போய் உள்ளதை நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
பீகார் மாநிலத்தில் இரு கட்டங்களாகச் சட்டசபைத் தேர்தல் நடந்துள்ளது. பீகார் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நவம்பர் 14ம் தேதி நடைபெறுகிறது. அங்கு ஜேடியு-பாஜகவின் என்டிஏ கூட்டணிக்கும் ஆர்ஜேடி- காங்கிரஸின் இந்தியா கூட்டணிக்கும் இடையே தான் கடும் போட்டி இருக்கிறது.












Click it and Unblock the Notifications