Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பீகாரில் தலையெழுத்தை தீர்மானிக்கும் முஸ்லீம்கள்.. 3ஆக பிரியும் இஸ்லாமிய வாக்குகள்! என்ன நடக்கும்?

Subscribe to Oneindia Tamil

பாட்னா: பீகாரில் 1990களில் முஸ்லிம்- யாதவ் வாக்கு வங்கியே, லாலு பிரசாத் யாதவை பீகார் அரசியலின் உச்சிக்குக் கொண்டு சென்றது. அவரது மகன் தேஜஸ்வி யாதவ், இப்போது மீண்டும் அதையே செய்ய முயல்கிறார். ஆனால், இப்போது காலம் வேறு.. சூழல் வேறு.. கூட்டணி வேறு.. இதனால் அதைச் சாதிக்க முடியுமா என்பதில் பெரிய கேள்விக்குறி இருக்கிறது. இது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்.!

பீகாரில் இன்னும் ஒரு சில வாரங்களில் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அங்கு இந்த முறை பல முனைப் போட்டி நிலவுவதால் ஒவ்வொரு வாக்கும் கூட முக்கியமானதாக மாறியுள்ளது. அதிலும் குறிப்பாக இந்தத் தேர்தலில் முஸ்லிம் வாக்காளர்கள் எந்தப் பக்கம் திரும்புவார்கள் என்பதே முக்கியமான கேள்வியாகியுள்ளது.

Bihar Elections How Muslim Voters Shaped Outcomes of past elections and What to expect in 2025

முஸ்லீம் வேட்பாளர்கள்

என்டிஏ கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதா தளம் 101 வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் முஸ்லிம் வேட்பாளர்களுக்கு வெறும் நான்கு இடங்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. கடந்த காலங்களில் இஸ்லாமியர்களின் வாக்குகளைப் பெற நிதிஷ் கட்சி பல நடவடிக்கைகளை எடுத்திருந்த நிலையில், இப்போது அதிலிருந்து விலகிச் செல்வது போலத் தெரிகிறது. பாஜகவுடன் கூட்டணி அமைத்தது இதற்கு இன்னொரு காரணமாகவும் பார்க்கப்படுகிறது.

மறுபுறம் பிரசாந்த் கிஷோர் 40 முஸ்லிம் வேட்பாளர்களைக் களமிறக்கப் போவதாக அறிவித்துள்ளார். அதேபோல அசாதுதீன் ஓவைசி சிறிய கட்சிகளுடன் சேர்ந்து மகா ஜனநாயகக் கூட்டணியை (Grand Democratic Alliance) அமைத்துள்ளார். ஓவைசி இஸ்லாமியர்கள் அதிகம் இருக்கும் தொகுதிகளைக் குறிவைத்துப் போட்டியிடுகிறார். அவர்கள் மொத்தம் 64 தொகுதிகளில் போட்டியிடத் திட்டமிட்டுள்ளது.

முஸ்லீம்கள்

கடந்த 2022 டேட்டாவின்படி பீகார் மக்கள் தொகையில் முஸ்லிம்கள் 17.7% பேர், அதாவது சுமார் 23 மில்லியன் பேர் உள்ளனர். அங்குள்ள 243 தொகுதிகளில் கிட்டத்தட்ட 70 தொகுதிகளில், குறிப்பாக சீமாஞ்சல் பிராந்தியத்தில் உள்ள கிஷன்கஞ்ச்(68%), கட்டிஹார் (43%), அராடியா (42%) மற்றும் பூர்னியா (38%) போன்ற பகுதிகளில் முஸ்லீம் செல்வாக்கு அதிகமாகவே இருக்கிறது.. ஆர்ஜேடி, பிரசாந்த் கிஷோர், ஓவைசி என 3 தரப்பும் முஸ்லிம் வாக்குகளைக் குறிவைப்பதால், அது பிளவுபட வாய்ப்புகள் மிக அதிகம்.

முஸ்லிம் வாக்காளர்கள் பீகார் தேர்தல் அரசியலில் வரலாற்று ரீதியாக முக்கியப் பங்கு வகித்துள்ளனர். அவர்கள் பெரும்பாலும் மதச்சார்பற்ற கூட்டணியை ஆதரித்து வாக்களித்து வந்துள்ளனர். 2010, 2015 மற்றும் 2020 தேர்தல்களில் அவர்கள் எப்படி வாக்களித்தனர் என்பது குறித்து நாம் பார்க்கலாம்!

2010 தேர்தல்

2010இல், ஆர்ஜேடி 30 முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்தியது. ஆனால், ஆறு பேர் மட்டுமே வெற்றி பெற்றனர். காங்கிரஸ் அதைவிட மோசமாக, அதன் 49 முஸ்லிம் வேட்பாளர்களில் மூன்று பேர் மட்டுமே வெற்றி பெற்றனர். நிதிஷ் குமார் அப்போது தான் முதல்முறையாக 5 ஆண்டுகள் முதல்வராக இருந்திருந்தார். அவரது ஆட்சிக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு இருந்ததால் ஜேடியு- பாஜக கூட்டணி வென்றது. அந்தத் தேர்தலில் முஸ்லிம் மக்கள் தொகை கணிசமாக உள்ள பகுதிகளிலும் பாஜக கூட்டணி வென்றது. முஸ்லிம் அல்லாத வாக்குகள் அனைத்தும் பாஜக கூட்டணிக்கு வந்ததே பிரதானக் காரணமாகும்.

இதுதான் பலமே!

ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, 2015இல் அங்கு அரசியல் களம் மாறியிருந்தது. ஆர்ஜேடி, ஜேடியு மற்றும் காங்கிரஸ் ஆகியவை மகா கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. இதனால் கிட்டத்தட்ட 80% முஸ்லிம் வாக்குகள் இந்தக் கூட்டணிக்கு வந்தது. இதன் மூலம் 24 முஸ்லிம் எம்எல்ஏக்கள் பீகார் சட்டசபைக்குத் தேர்வானார்கள். அந்தத் தேர்தலில் சீமாஞ்சலில் ஆறு தொகுதிகளில் மஜ்லீஸ் கட்சி போட்டியிட்ட போதிலும், அவர்களால் வெல்ல முடியவில்லை.

பாஜகவும் இரண்டு முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்தினர். ஆனால், அவர்களால் வெல்ல முடியவில்லை. "MY" (முஸ்லிம்-யாதவ்) கூட்டணி பலமே ஆர்ஜேடி- ஜேடியு கூட்டணியை அந்த முறை வெல்ல வைத்தது.

பிளவுபட்ட வாக்காளர்கள்

2020ல் மீண்டும் இஸ்லாமிய வாக்குகள் இரண்டாகப் பிளவுபட்டது. ஒரு பக்கம் தேஜஸ்வி யாதவ் தலைமையிலான மகாபந்தன் கூட்டணி, இன்னொரு பக்கம் மஜல்லீஸ் ட்சி என இஸ்லாமிய வாக்குகள் பிரிந்தது. இதில் மஜ்லீஸ் கட்சி 5 இடங்களில் வென்றது. ஆர்ஜேடி மற்றும் காங்கிரஸ் கட்சிகள் மீதும் அதிருப்தியடைந்த இளம் முஸ்லிம் வாக்காளர்களிடையே மஜ்லீஸ் கட்சியின் வளர்ந்து வரும் செல்வாக்கை இது காட்டியது. ராஷ்ட்ரிய ஜனதா தளம் 18 முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்தியது. அவர்களில் எட்டுப் பேர் வெற்றி பெற்றனர். காங்கிரஸ் 11 முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்திய நிலையில், அதில் நான்கு பேர் மட்டுமே வெற்றி பெற்றனர்.

அந்தத் தேர்தலில் பெரும்பாலான தொகுதிகளில் மகாபந்தன் கூட்டணி தங்கள் செல்வாக்கைத் தக்கவைத்து. இருப்பினும், சீமாஞ்சலில் மஜ்லீஸ் கட்சியின் வருகை கணிசமான வாக்குகளைப் பிரித்தது. இது மகாபந்தன் கூட்டணி வாக்குகளைக் குறைத்து, மறைமுகமாக என்டிஏ கூட்டணிக்கு நன்மை அளித்தது. இப்போது 2025 தேர்தலிலும் மீண்டும் அதேபோன்ற ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது.

யாருக்கு லாபம்

அங்கு ஆர்ஜேடி-காங்கிரஸ் கூட்டணி பிரதான எதிர்க்கட்சியாக இருந்தாலும், இரு தரப்பிற்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவுகிறது. வேட்புமனு தாக்கல் தேதியே முடிந்துவிட்ட போதிலும் இன்னும் தொகுதிப் பங்கீடு இறுதியாகவில்லை. மறுபுறம் மஜ்லீஸ் கட்சி, சந்திரசேகர் ஆசாத்தின் ஆசாத் சமாஜ் கட்சி மற்றும் சுவாமி பிரசாத் மௌரியாவின் ஏ.ஜே.பி.யுடன் இணைந்து மகா ஜனநாயகக் கூட்டணியை அமைத்துள்ளது. இது தவிர பிரசாந்த் கிஷோரும் கணிசமான அளவுக்கு முஸ்லீம் வேட்பாளர்களைக் களமிறக்குகிறார். இதனால் முஸ்லீம் வாக்குகள் பிரிகிறது.

முஸ்லீம் வாக்குகள் பிரிவது மறைமுகமாக என்டிஏ கூட்டணிக்கே நன்மை தரும். பீகாரின் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு தொகுதிகளில் முஸ்லிம்கள் செல்வாக்கு செலுத்தினாலும், அந்த வாக்குகள் பிரிவது என்டிஏவுக்கு சாதகமாக அமையும். இதனால் வரும் தேர்தலில் முஸ்லீம் வாக்குகள் எப்படிப் போகும்.. யாருக்கு நன்மை கொடுக்கும் என்பதைக் கவனமாகப் பார்க்க வேண்டி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+