நீங்க கன்னி கழியாதவரா, எத்தனை மனைவி இருக்காங்க.. மத்திய அரசு கல்வி நிறுவனத்தின் குண்டக்க மண்டக்க!

பாட்னாவில் உள்ள இந்திரா காந்தி மருத்துவ அறிவியல் கல்லூரியில் உள்ள பணியாளர்களுக்கான விண்ணப்பத்தில் திருமணமானவரா என்பதற்கு பதிலாக, கன்னி கழியாதவரா என்று கேட்டுள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

பாட்னா: பீகார் மாநிலத்தில் உள்ள இந்திரா காந்தி மருத்துவ அறிவியல் கல்லூரியில் பணியாளர் நியமனத்துக்கான உறுதி மொழி படிவத்தில் விண்ணப்பதாரர் திருமண விவரங்கள் குறித்து கேட்கும் போது சிங்கிள் என்பதற்கு பதிலாக கன்னி கழியாதவரா என்ற பொருள் படும்படியாக விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ளது கேலிப் பொருளாக மாறிவிட்டது.

படிப்பதற்கும் சரி, பணியாற்றுவதற்கும் சரி, சிலவற்றை வாங்கும்போது ஒரு விண்ணப்பப் படிவம் கொடுக்கப்படும். அதில் நமது சுயவிவரங்களுடன் திருமணமானவரா அல்லது திருமணமாகாதவரா என்ற கேள்வியும் இடம்பெற்றிருக்கும்.

அந்த வகையில் பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள இந்தியா காந்தி மருத்துவ அறிவியல் கல்லூரியில் பணி நியமனத்துக்கான உறுதிமொழி படிவத்தில் ஒரு வினோதமான கேள்வி கேட்கப்பட்டிருந்தது.

சிங்கிளுக்குப் பதில்

அதாவது விண்ணப்பதாரர் திருமணமானவரா அல்லது கணவர், மனைவியை இழந்தவரா அல்லது கன்னி கழியாதவரா என்ற அர்த்தத்தில் இருந்தது. அதாவது ஆங்கிலத்தில் சிங்கிள் என அச்சிடுவதற்கு பதிலாக விர்ஜின் என அச்சிட்டுள்ளனர்.

இதுக்குக் கூடவா அர்த்தம் தெரியாது

இதுக்குக் கூடவா அர்த்தம் தெரியாது

விர்ஜின் என்றால் கன்னி என்று அர்த்தம். இவர்களது ஆங்கில அறிவு குறித்து நெட்டிசன்கள் கலாய்த்துள்ளனர். இன்னும் சிலர் கன்னி கழியாதவர்களுக்கென்று சிறப்பு இடஒதுக்கீடு ஏதேனும் இருக்கா என்று கேட்டுள்ளனர்.

எத்தனை மனைவி

அதேபோல எத்தனை மனைவியர் உள்ளனர் என்ற கேள்வியும் அந்த டிக்ளரேஷனில் இடம் பெற்றுள்ளது. இதுகுறித்து ஏஎன்ஐக்கு கல்வி நிறுவனத்தின் மருத்துவக் கண்காணிப்பாளர் மனீஷ் மண்டல் விளக்குகையில், எய்ம்ஸ் கல்வி நிறுவனத்தின் விதிகளைத்தான் நாங்களும் பின்பற்றுகிறோம். அவர்களது பார்மில் உள்ளதுதான் இதிலும் உள்ளது.

அவங்களை மாத்தச் சொல்லுங்க

அவங்களை மாத்தச் சொல்லுங்க

அரசு விதிமுறைகள், அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ளபடிதான் இந்த வார்த்தைகள் உள்ளன.அவர்கள் மாற்றினால் நாங்களும் மாற்றுவோம் என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+