பீகாருல அரசு பங்களாவ விசேஷத்துக்கு வாடகைக்கு விட்டு பணம் பாத்தங்களாம் அமைச்சர்கள்
பீஹார் மாநிலத்தில் அமைச்சர்கள் தங்களுக்கு ஒதுக்கிய அரசு பங்களாக்களை விசேஷங்களுக்கு வாடகைக்கு விட்டு பணம் சம்பாதித்தது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
பாட்னா : அரசு தரும் சலுகைகள் போதாதென்று பீகார் மாநிலத்தில் அமைச்சர்கள் தங்களுக்கு ஒதுக்கிய வீடுகளை திருமண விசேஷங்களுக்கு வாடகைக்க்கு விட்டு லாபம் பார்ப்பது தெரிய வந்துள்ளது.
ஐக்கிய ஜனதா தளக் கட்சித்தலைவர் நிதிஷ்குமார் தலைமையிலான அரசில் இடம்பெற்றுள்ள அமைச்சர்கள் தங்களது அரசு பங்களாக்களை தனியார் நிகழ்ச்சிகளான திருமணம், பிறந்தநாள் விழா உள்ளிட்டவற்றிற்கு வாடகைக்க விட்டு லாபம் சம்பாதித்துள்ளதாக தனியார் செய்தி சேனல் ஒன்று தனது விசாரணையில் தகவல் திரட்டி செய்தி வெளியிட்டுள்ளது.

சிறுபான்மை நல அமைச்சர் அப்துல் கஃபூரின் பங்களாவை வாடகைக்கு விடுவதற்காக தனியாக ஒரு ஈவென்ட் மேனனேஜர் செயல்படுகிறாராம். அவர் பங்களாவை வாடகைக்கு விடுவத குறித்து கூறுகையில், ஆம் இங்கு ஒரு நாள் நிகழ்ச்சிக்கு இரண்டரை லட்சம் ரூபாய் வாடகையாக வசூலிக்கப்படுகிறது என்கிறார். மற்ற சொகுசு வசதிகளுக்கு கூடுதலாக செலவு செய்தால் அவையும் கிடைக்கும் என்றும் அவர் கூறினாராம்.
இதே போன்று அமைச்சர் சிவ்சந்திர ராமின் பங்களாவும் தனியார் நிகழ்ச்சிகளுக்காக வாடகைக்கு விடப்படுகிறதாம்
இவர்கள் மட்டுமின்றி முதல்வர் நிதிஷின் ஐக்கிய ஜனதா தளக் கட்சி எம்எல்ஏ நரேந்திர சிங்கும் தன்னுடைய பங்களாவை வாடகைக்கு விட்டு பணம் சம்பாதித்து வருகிறாராம். இந்த விவகாரம் குறித்து கேள்வி எழுப்பியுள்ள முன்னாள் துணை முதல்வர் சுஷில் மோடி,அரசு பங்களாக்களில் நடைபெறும் தனியார் நிகழ்ச்சிகள் குறித்து முதல்வர் நிதிஷ் இப்போதாவது வாய் திறப்பாரா என வினவியுள்ளார். அரசு பங்களா வாடகைக்கு விடும் விவகாரம் முதல்வருக்கு தெரியும் என்றாலும், அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், அங்கு நடைபெறும் பல நிகழ்ச்சிகளில் முதல்வரே பங்கேற்றிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
அரசு ஊதியம், கார், பங்களா சிறப்பு சலுகைகள் என மக்களின் வரிப்பணத்திலேயே அனைத்தையும் அனுபவிக்கும்அரசியல்வாதிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பங்களாக்களை வைத்தும் சம்பாதிக்கத் தொடங்கியுள்ளது அரைசியல்வாதிகளின் பணம் சம்பாதிக்கும் எண்ணத்தை பிரதிபலிப்பதாக பலரும் கருதுகின்றனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications