தாயை வீழ்த்தியவரை தோற்கடித்துப் பழிக்குப் பழி வாங்கிய லாலு மகன்!

Subscribe to Oneindia Tamil

பாட்னா: தமிழகத்திலாவது விரல் விட்டு எண்ணி விடும் அளவுக்குத்தான் வாரிசு அரசியல்வாதிகள் உள்ளனர். ஆனால் வட மாநிலங்களில் கால் விரல்களையும் சேர்த்து எண்ணினாலும் போதாது. அம்புட்டு குடும்பங்கள் அங்கு அரசியல் செய்து வருகின்றன. பீகாரில் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் மொத்தம் 22 அரசியல் குடும்பங்கள் போட்டியிட்டதில் 7 குடும்பங்களுக்கு வெற்றி கிடைத்துள்ளது. 15 குடும்பங்கள் தோல்வியடைந்துள்ளன.

இந்த 22 குடும்பங்களில் பாஜக சார்பில் களம் கண்டவர்கள்தான் அதிகம். அதாவது 8 பேர் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டிருந்தனர். லோக் ஜனசக்தி சார்பில் 6 பேரும், ஐக்கிய ஜனதாதளம் சார்பில் 5 பேரும் களம் கண்டனர்.

ராஷ்டிரிய ஜனதாதளம் சார்பில் 3 பேரும், மஞ்சியின் இந்துஸ்தான் அவாமி மோர்ச்சா சார்பில் 3 பேரும், சமாஜ்வாடி கட்சி சார்பில் ஒருவரும் களம் கண்டனர். ஒருவர் சுயேச்சையாக நின்றதாக இந்தியாஸ்பென்ட் புள்ளி்விவரம் தெரிவிக்கிறது.

100 சதவீத வெற்றி கண்ட லாலு குடும்பம்

100 சதவீத வெற்றி கண்ட லாலு குடும்பம்

இந்த வாரிசு வேட்பாளர்களில் லாலு பிரசாத் யாதவ் குடும்பத்தினர்தான் 100 சதவீத வெற்றியைப் பெற்றுள்ளனர். அதாவது மொத்தம் 2 பேர் போட்டியிட்டனர். இரண்டு பேருமே வெற்றி பெற்றுள்ளனர்.

2 மகன்கள்

2 மகன்கள்

லாலுவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ் மஹுவா தொகுதியிலிருந்து வெற்றி பெற்றார். இவர் மஞ்சி கட்சி வேட்பாளர் ரவீந்திர ராய் என்பவரை 28,155 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.

2வது மகன்

2வது மகன்

லாலுவின் இளைய மகன் தேஜஸ்வி பிரதாப் யாதவ் ரகோப்பூர் தொகுதியிலிருந்து வென்றுள்ளார். இவர் பாஜக வேட்பாளர் சதீஷ் குமார் யாதவை வீழ்த்தினார்.

தாயை வீழ்த்தியவரை பழிவாங்கிய லாலு மகன்

தாயை வீழ்த்தியவரை பழிவாங்கிய லாலு மகன்

இந்த சதீஷ் குமார் வேறு யாருமல்ல. கடந்த 2010ம் ஆண்டு நடந்த தேர்தலில் நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் சார்பில் போட்டியிட்டு இதே தொகுதியில் தேஜஸ்வியின் தாயாரான ராப்ரி தேவியை தோற்கடித்தவர் ஆவார். தற்போது தனது தாயாரை வீழ்த்தியவரை வென்று பழி தீர்த்துள்ளார் மகன் தேஜஸ்வி.

மஞ்சி மகன் தோல்வி

மஞ்சி மகன் தோல்வி

முன்னாள் முதல்வர் ஜித்தன் ராம் மஞ்சியின் மகன் சந்தோஷ் சுமன் காங்கிரஸ் வேட்பாளரிடம் பத்தாயிரத்து சொச்சம் வாக்குகளில் தோல்வி அடைந்தார்.

பாஸ்வான் குடும்பத்துக்கு படு தோல்வி

பாஸ்வான் குடும்பத்துக்கு படு தோல்வி

இந்தத் தேர்தலில் ராம்விலாஸ் பாஸ்வான் குடும்பத்திற்குப் பெரும் தோல்வி ஏற்பட்டுள்ளது. அவரது குடும்பத்திலிருந்து போட்டியிட்ட 4 பேர் தோல்வியைத் தழுவியுள்ளனர்.

பாஸ்வான் தம்பி, மருமகள், மருமகன் தோல்வி

பாஸ்வான் தம்பி, மருமகள், மருமகன் தோல்வி

பாஸ்வானின் உறவினர் தம்பி மகன் பிரின்ஸ் ராஜ், தம்பி பசுபதி குமார் பரஸ், மருமகன் அனில் குமார், மருமகள் சரிதா தேவி ஆகியோர் இந்தத் தேர்தலில் படு தோல்வியைச் சந்தித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+