காஷ்மீரத்து அக்கா தங்கச்சியை மணந்த அண்ணன் தம்பிகள்.. தந்தை புகார்.. கைது செய்த போலீஸ்!
காஷ்மீர் சகோதரிகளை மணந்த பீகார் சகோதர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்
பாட்னா: காதலுக்கு காஷ்மீர் தெரியுமா.. பீகார் தெரியுமா.. சத்தியமா தெரியாதுதான்.. அதனால்தானோ என்னவோ காஷ்மீரத்து அக்கா-தங்கச்சியை கல்யாணம் பண்ணிய பீகார் அண்ணன் - தம்பிகளை போலீசார் மாமியார்" வீட்டுக்கு கூட்டிச்சென்றனர் .
காஷ்மீர் விவகாரம் நாடு முழுக்க பரபரப்பாகி வந்தாலும், பல வருடங்களாக காஷ்மீர் என்றாலே ஒருவித பதட்டம் நம்மை வந்து தொத்தி கொள்ளும். இப்போது ஒரு கல்யாண சேதி வந்து.. அதுவும் பரபரப்பாகி விட்டது.

பீகார் மாநிலம் சுபால் மாவட்டத்தில் உள்ளது ராம்விஷ்ணுபூர் என்ற கிராம். இங்கு வசித்து வந்தவர்கள் பர்வேஸ் ஆலம், தர்வேஜ் ஆலம்.
இவர்கள் இருவருமே சகோதரர்கள். ஜம்மு காஷ்மீரின் ரம்பான் மாவட்டத்தில் கார்ப்பென்டர்களாக கொஞ்ச நாளைக்கு முன்னாடி வேலை பார்த்து வந்தனர். வேலைக்கு போன இடத்தில் லவ் வந்துவிட்டது. அண்ணன்-தம்பிகளுக்கு, அங்கு வசித்து வந்த அக்கா - தங்கையின் மீது காதல்!
அதனால் அந்த சகோதரிகளை அழைத்து கொண்டு, தங்கள் சொந்த ஊருக்கு வந்து விட்டனர். சில நாட்களுக்கு முன்னர்தான் திருமணம் நடந்ததாக கூறப்படுகிறது.
இப்போது விஷயம் என்னவென்றால், காஷ்மீர் சகோதரிகளை கல்யாணம் செய்துகொண்ட பீகார் சகோதரர்களை காஷ்மீர் போலீஸ் கைது செய்துள்ளது. இதற்கு, தங்கள் மகள்களை இளைஞர்கள் கடத்திவிட்டதாக தந்தை புகார் அளித்ததே காரணம். அதனால்தான்தான் பீகார் போலீசாரின் உதவியுடன் காஷ்மீர் போலீசார் இளைஞர்களை கைது செய்துள்ளனர்.
ஆனால் சகோதரர்களோ.. அவர்கள் சம்மதத்துடன்தான் கல்யாணம் செய்து கொண்டோம். கட்டாயப்படுத்தவில்லை.. கடத்தவும் இல்லை என்று விளக்கம் அளித்து வருகின்றனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications