சிறையில் பிறந்த குழந்தைக்கு யாரு அப்பா? நீதிபதி கேள்வியால் கதறி அழுத சரிதா நாயர்

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் சிறையில் வைத்து பிறந்த 2வது குழந்தைக்கு தந்தை யார் என்று சோலார் விசாரணைக் கமிஷன் நீதிபதி கேள்வி எழுப்பியதால் அதை தாங்க முடியாத சரிதா நாயர் நீதிமன்றத்தில் கதறி அழுதார்.

சோலார் பேனல் மோசடி விவகாரம் கேரளாவில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி சிவராஜன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள விசாரணைக் கமிஷன் முன் சோலார் பேனல் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட சரிதா நாயர், அவரது முன்னாள் கணவர் என கூறப்படும் பிஜு ராதாகிருஷ்ணன் மற்றும் பலர் ஆஜராகி வாக்குமூலம் அளித்து வருகின்றனர்.

பரபரப்பு வாக்கு மூலம்

பரபரப்பு வாக்கு மூலம்

சரிதாநாயரின் முன்னாள் கணவர் பிஜு ராதாகிருஷ்ணன் கடந்த வாரம் ஆஜராகி சாட்சியம் அளித்தார். அப்போது சோலார் பேனல் விவகாரத்தில் முதல்வர் உம்மன் சாண்டிக்கு தொடர்பு இருப்பதாகவும், அவருக்கு ரூ.5.5 கோடி பணம் கொடுத்ததோடு, அவரும், அவரது அமைச்சரவை சகாக்களும் சரிதாநாயரை இச்சைக்கு பயன்படுத்தி கொண்டதாக கூறினார்.

கோவையில் சி.டி ஆதாரம்

கோவையில் சி.டி ஆதாரம்

இது தொடர்பான சி.டி. ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் தெரிவித்தார். அந்த ஆதாரங்களை கமிஷன் முன்பு சமர்ப்பிக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார். அந்த ஆதாரங்கள் கோவையில் உள்ள உறவினர் வீட்டில் இருப்பதாக பிஜு ராதாகிருஷ்ணன் கூறியதை தொடர்ந்து விசாரணை கமிஷன் ஊழியர்கள் உள்பட 6 பேர் பிஜு ராதாகிருஷ்ணனுடன் கோவை சென்றனர். அங்கு கைப்பற்றப்பட்ட பொருட்களில் சி.டி. ஆதாரம் எதுவும் இல்லை.

நீதிபதி கண்டனம்

நீதிபதி கண்டனம்

இத்தகவல் கடந்த வெள்ளிக்கிழமை விசாரணை கமிஷன் முன்பு தெரிவிக்கப்பட்டது. அப்போது ஆதாரங்களை தாக்கல் செய்ய தனக்கு மேலும் கால அவகாசம் வேண்டுமென பிஜு ராதாகிருஷ்ணன் கூறினார். அதை ஏற்றுக்கொண்ட நீதிபதி வருகிற பிப்ரவரி 15ம்தேதி வரை அவகாசம் அளித்தார். மேலும் இந்த காலக்கட்டத்தில் பிஜு ராதாகிருஷ்ணன் ஆதாரங்களை திரட்ட கமிஷன் எந்த ஒத்துழைப்பும் அளிக்காது. அவரே அப்பணியை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தியது.

ரகசியம் காக்க அறிவுறுத்தல்

ரகசியம் காக்க அறிவுறுத்தல்

அதோடு கடந்த வியாழக்கிழமை ஆதாரங்கள் சேகரிக்க சென்ற சம்பவத்துக்கும், அதில் ஈடுபட்ட போலீசாருக்கும் கடும் கண்டனம் தெரிவித்தது. ரகசியமாக சென்று ஆதாரத்தை சேகரித்து வருவதற்கு பதில், ஊருக்கெல்லாம் தெரிவித்து, விழாவுக்கு செல்வது போல கோவை சென்றது ஏன்? என்று போலீசாருக்கு விசாரணை கமிஷன் கேள்வி எழுப்பியது. மேலும் இப்பிரச்சினையை ஊடகங்களும் பெரிதுப்படுத்தியதாக குற்றம் சாட்டியது.

சரிதா நாயரிடம் விசாரணை

சரிதா நாயரிடம் விசாரணை

இந்நிலையில், இதுதொடர்பான விசாரணை செவ்வாய்கிழமை நடைபெற்றபோது, சரிதாவை பார்த்து நீதிபதி, 2010 ஆம் ஆண்டில் சிறையில் வைத்து நீங்கள் பெற்றெடுத்த குழந்தைக்கு தந்தை யார் என கேள்வி எழுப்பியுள்ளார். இந்த கேள்வியால் அதிர்ச்சியடைந்த சரிதா, இது எனது தனிப்பட்ட விடயம், அதில் நீதிமன்றம் தலையிட அவசியமில்லை என்று கூறி கதறி அழுதார்.

இரண்டாவது குழந்தை

இரண்டாவது குழந்தை

சரிதா நாயருக்கும், பிஜு மேனனுக்கும் கடந்த 2007 ஆம் ஆண்டு விவாகரத்து ஆனது, இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. 2010 ஆம் ஆண்டில் மோசடி வழக்கில் கைதாகி திருவனந்தபுரம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது சரிதா நாயர் 2 வது குழந்தையை பெற்றெடுத்தார். ஆனால், பிஜு ராதாகிருஷ்ணனுக்கும் எனக்கும் எவ்வித உறவும் இல்லை என்றும் தொழில்ரீதியாக மட்டுமே பழக்கம் உள்ளது எனவும் சரிதா நாயர் நீதிமன்றத்தில் கூறியிருந்தார்.

குழந்தைக்கு தந்தை யார்

குழந்தைக்கு தந்தை யார்

நேற்று விசாரணை நடந்தபோது பிஜு ராதாகிருஷ்ணன் கணவன் இல்லை என்றால், 2010ல் சிறையில் வைத்து பிறந்த குழந்தைக்கு தந்தை யார் என நீதிபதி சிவராஜன் கேட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த சரிதா நாயர், அது எனது தனிப்பட்ட விஷயம், அதில் நீதிமன்றம் தலையிட அவசியமில்லை என ஆவேசமாக கூறினார்.

விசாரணை ஒத்திவைப்பு

விசாரணை ஒத்திவைப்பு

சரிதா நாயர் திடீரென நீதிபதி முன்னிலையில் கதறி அழுதார். அப்போது சரிதா நாயரின் மூக்கிலிருந்து சிறிது ரத்தமும் வந்தது. இதனால் நீதிமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து விசாரணையை நீதிபதி சிவராஜன் ஒத்திவைத்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+