ஒடிசா இடைத்தேர்தல்... பிரமாண்ட வெற்றிபெற்ற பிஜேடி.. காங்கிரஸை விட பின்னுக்கு சென்ற பாஜக
புவனேஷ்வர்: பிரஜ்ராஜ்நகர் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் பிஜு ஜனதா தளம் கட்சியின் வேட்பாளர் அல்கா மோஹண்டி 65,000 வாக்குகள் வித்தியாசத்தில் பெரும் வெற்றியை பதிவு செய்துள்ளார்.
பிரஜ்ராஜ்நகர் சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஒடிசா சட்டப்பேரவை முன்னாள் சபாநாயகர் கிஷோர் மோஹண்டி, கடந்த 2021 டிசம்பர் மாதம் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.
இதனால் அவர் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த பிரஜ்ராஜ் நகர் தொகுதி காலியானதாக இந்திய தேர்த ஆணையத்தால் அறிவிக்கப்பட்டது.

இடைத்தேர்தல்
இதனை தொடர்ந்து பிரஜ்ராஜ் நகர் இந்த தொகுதிக்காக இடைத் தேர்தல் மே 31 ஆம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதில் ஆளும் பிஜு ஜனதா தளம் கட்சி சார்பில் அல்கா மோஹண்டி வேட்பாளராக நிறுத்தப்பட்டார். பாஜக சார்பில் ராதாராணி பாண்டா, காங்கிரஸ் சார்பில் கிஷோர் பட்டேல் ஆகியோர் போட்டியிட்டனர்.

71.53% வாக்குகள் பதிவு
2,14,898 வாக்காளர்களை கொண்ட பிரஜ்ராஜ்நகர் தொகுதியில் கடந்த மே 31 ஆம் தேதி நடைபெற்ற தேர்தலின் முடிவில் 71.53% வாக்குகள் பதிவாகின. இதனை தொடர்ந்து இன்று பிரஜ்ராஜ்நகரில் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. தபால் வாக்குகளை தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திர வாக்குகள் எண்ணப்பட்டன.

வாக்கு எண்ணிக்கை
வாக்கு எண்ணிக்கை 14 சுற்றுகளாக நடைபெற்றது. முதல் சுற்றிலிருந்தே பிஜு ஜனதா தளம் கட்சி வேட்பாளர் அல்கா மோஹண்டி முன்னிலை வகித்து வந்தார். பாஜக வேட்பாளர் ராதாராணி பாண்டா தொடக்கத்தில் 2வது இடத்திலும் காங்கிரஸ் வேட்பாளர், கிஷோர் பட்டேல் மூன்றாவது இடத்திலும் தொடர்ந்து வந்தனர்.

பிஜேடி வெற்றி
அடுத்தடுத்து சுற்று வாக்குகளை எண்ணும்போது பிஜு ஜனதா தளம் கட்சி வேட்பாளர் அல்கா மோஹண்டி வாக்கு வித்தியாசம் அதிகரித்தது. 2 வது இடத்தில் இருந்த பாஜக வேட்பாளர் ராதாராணி பாண்டா மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டார். இறுதி சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் பிஜேடி வேட்பாளர் சுமார் 65,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். இதில் பாஜக கடும் நெருக்கடி கொடுக்கும் என எதிர்பார்த்த நிலையில், கடந்த தேர்தலைவிட குறைவான வாக்குகளை பெற்று காங்கிரஸை விட பின்னுக்கு தள்ளப்பட்டது.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications