பிளவுபட்ட ஜம்மு காஷ்மீர்! பாஜக, தேசிய மாநாட்டுக் கட்சி எப்படி ஓட்டுகள் வாங்கியிருக்கிறது தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டசபை தேர்தல் ஜம்மு பிராந்திய வாக்காளர்கள் பாஜகவுக்கு அமோக ஆதரவைக் கொடுத்துள்ளனர்; ஆனால் காஷ்மீர் பள்ளத்தாக்கு வாக்காளர்கள் தேசிய மாநாட்டுக் கட்சிக்கு அதிகமாக வாக்களித்துள்ளனர்; காங்கிரஸுக்கும் காஷ்மீர் பள்ளத்தாக்கில் வாக்குகள் கிடைத்துள்ளன. ஜம்மு காஷ்மீர் தேர்தலில் இரு பிராந்திய வாக்காளர்களும் வேறு வேறான நிலைப்பாட்டை வெளிப்படுத்தி இருக்கின்றனர்.

ஜம்மு காஷ்மீர் 2019-ம் ஆண்டு யூனியன் பிரதேசமாகப் பிரிக்கப்பட்ட பின் 3 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

haryana assembly election results 2024 jammu kashmir assembly election results 2024 2024 2024

தேசிய மாநாட்டுக் கட்சி தனிப்பெரும் கட்சியாக 42 இடங்களில் வென்றது. அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் 6 இடங்களில் வென்றது. ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் ஆட்சி அமைக்க பெரும்பான்மைக்கு தேவையான இடங்கள் 46. இதனால் தேசிய மாநாட்டுக் கட்சி- காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை அமைக்க உள்ளது.

"இந்தியா" கூட்டணியில் தேசிய மாநாட்டுக் கட்சி 51 இடங்களிலும் காங்கிரஸ் 32 இடங்களிலும் போட்டியிட்டன. 5 இடங்களிலும் நட்பு அடிப்படையில் இரு கட்சிகளும் வேட்பாளர்களை நிறுத்தின. இதில் தேசிய மாநாட்டுக் கட்சி 42 இடங்களைக் கைப்பற்றியது. காங்கிரஸ் 6 இடங்களில் மட்டுமே வென்றது.

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசமானது இரு வேறு நிலவியல் மற்றும் மத அடிப்படையில் பிரிந்து கிடக்கிறது. ஜம்மு பிராந்தியம் இந்துக்களைப் பெரும்பான்மையினராகக் கொண்டது; காஷ்மீர் பள்ளதாக்கு முஸ்லிம்களைப் பெரும்பான்மையினராகக் கொண்டது.

ஜம்மு பிராந்தியத்தில் மொத்தம் 43 தொகுதிகளும் காஷ்மீர் பள்ளத்தாக்கில் 47 தொகுதிகளும் உள்ளன.

காஷ்மீர் பள்ளத்தாக்கில் மட்டும் தேசிய மாநாட்டுக் கட்சி 35 இடங்களில் வென்றுள்ளது; ஜம்மு பிராந்தியத்தில் 7 இடங்களில் தேசிய மாநாட்டுக் கட்சிக்கு வெற்றி கிடைத்தது. தேசிய மாநாட்டுக் கட்சி 9 இந்து வேட்பாளர்களை களமிறக்கியது. இவர்களில் 2 பேர் வெற்றி பெற்றனர்.

ஜம்மு பிராந்தியத்தில் காங்கிரஸுக்கு ஒரே ஒரு இடம்தான் கிடைத்தது. காஷ்மீர் பள்ளத்தாக்கில் 5 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. ஜம்மு காஷ்மீர் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட அனைத்து 'இந்து' வேட்பாளர்களுமே தோல்வியைத் தழுவினர்.

குறிப்பாக ஜம்மு பிராந்தியத்தில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள், முன்னாள் அமைச்சர்கள் என பலரும் படுதோல்வியைத் தழுவினர். காங்கிரஸின் தாரா சந்த் உள்ளிட்ட 2 செயல் தலைவர்களுமே தோல்வியைத் தழுவி இருப்பது அக்கட்சிக்கு பேரதிர்ச்சியாகும்.

ஜம்மு காஷ்மீர் தேர்தல் வரலாற்றிலேயே பாஜக முதல் முறையாக 29 தொகுதிகளில் வென்றுள்ளது. இந்த 29 தொகுதிகளுமே இந்துக்கள் பெரும்பான்மையினராக இருக்கக் கூடிய ஜம்மு பிராந்தியத்தில் இடம் பெற்றிருப்பவை மட்டுமே. காஷ்மீர் பள்ளத்தாக்கில் பாஜகவுக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை.

ஜம்மு பிராந்தியத்தில் மட்டும் 5 சுயேட்சைகள் வெற்றி பெற்று 3-வது இடத்தில் உள்ளனர். அதே போல ஆம் ஆத்மி கட்சியும் ஒரு இடத்தில் வென்றுள்ளது குலாம் நபி ஆசாத் கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி,சிறுத்தைகள் கட்சி என பல கட்சிகள் வேட்பாளர்களை களமிறக்கியும் வெல்ல முடியவில்லை.

ஜம்மு காஷ்மீர் தேர்தல்களில் கணிசமான டபுள் டிஜிட் இடங்களைப் பிடித்து வந்த மெகபூபா முப்தியின் மக்கள் ஜனநாயகக் கட்சி இந்த முறை 3 இடங்கள் என சிங்கிள் டிஜிட்டில் சுருங்கிப் போனது. அந்தக் கட்சிக்கு மிக மோசமான தோல்வி இது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+