For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

“தீ”யாக நடக்கும் திரிபுரா தேர்தல் பணி.. 48 வேட்பாளர்களை அறிவித்த பாஜக! ஆட்சியை தக்க வைக்குமா தாமரை?

திரிபுரா சட்டசபை தேர்தலில் போட்டியிடும் 48 வேட்பாளர்களை கொண்ட பட்டியலை மாநில பாஜக தலைமை வெளியிட்டு இருக்கிறது.

Google Oneindia Tamil News

திரிபுரா: வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் வரும் பிப்ரவரி மாதம் 16 ஆம் தேதி சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் 48 வேட்பாளர்களை கொண்ட பட்டியலை மாநில பாஜக தலைமை வெளியிட்டு இருக்கிறது. திரிபுரா மாநில முதலமைச்சர் மாணிக் சஹா டவுன் போர்டோவலி தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்பட்டு உள்ளார்.

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான திரிபுரா மாநிலத்தில் மாணிக் சஹா தலைமையிலான பாஜக ஆட்சி செய்து வருகிறது. பாஜக ஆட்சியின் 5 ஆண்டு பதவி காலம் முடிவடைய இருக்கும் நிலையில் வரும் பிப்ரவரி 16 ஆம் தேதி சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதற்கான வாக்கு எண்ணிக்கை மார்ச் மாதம் 2 ஆம் தேதி நடைபெற உள்ளது. திரிபுராவில் எதிர்க்கட்சியாக இருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைமையிலான இடது முன்னணி கூட்டணியில் காங்கிரஸ் கட்சியும் அங்கம் வகிக்கிறது.

இடைத்தேர்தலில் பணப் பட்டுவாடாவை தடுக்க அதிரடி.. ஈரோடு வங்கிகளுக்கு தேர்தல் அதிகாரி கட்டுப்பாடு! இடைத்தேர்தலில் பணப் பட்டுவாடாவை தடுக்க அதிரடி.. ஈரோடு வங்கிகளுக்கு தேர்தல் அதிகாரி கட்டுப்பாடு!

இடது முன்னணி கூட்டணி

இடது முன்னணி கூட்டணி

சிபிஎம், சிபிஐ, காங்கிரஸ், ஆர்.எஸ்.பி, பார்வேர்டு பிளாக் உள்ளிட்ட கட்சிகள் இடது முன்னணி கூட்டணியில் அங்கம் வகிக்கின்றனர். திரிபுராவில் பல ஆண்டுகளாக முதலமைச்சராக இருந்த மாணிக் சர்க்கார் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை. மறுபக்கம் ஆளும் கட்சியாக பாரதிய ஜனதா இன்று திரிபுரா சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் தங்கள் கட்சியின் 48 வேட்பாளர்களின் பெயர்களை வெளியிட்டது.

முதலமைச்சர் மாணிக் சஹா

முதலமைச்சர் மாணிக் சஹா

அதன்படி அம்மாநில முதலமைச்சராக இருக்கும் மாணிக் சஹா டவுன் போர்டோவலி தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்பட்டு உள்ளார். மோகன் பூர் தொகுதியில் ரத்தன் லால் நாத், பாமுடியா தனித் தொகுதியில் கிருஷ்ணதன் தாஸ், பர்ஜாலா தனித் தொகுதியில் திலிப் குமார் தாஸ், கயேர்பூர் தொகுதியில் ரதன் சக்ரபூர்தி, ராம்நகர் தொகுதியில் சுரஜித் தட்டா போட்டியிடுகிறார்கள்.

பாஜக வேட்பாளர் பட்டியல்

பாஜக வேட்பாளர் பட்டியல்

பனாமலிபூர் தொகுதியில் ராஜீவ் பட்டாசார்ஜீ, மஜ்லிஷ்புர் தொகுதியில் சுசாந்தா சவுத்ரி, பிரதாப்கர் தனித்தொகுதியில் ரேபதி மோகன் தாஸ், பத்ராகட் தனித்தொகுதியில் சுஸ்ஸ்ரீ மினாராணி சர்கா, கமலாசாகர் தொகுதியில் அந்தாரா தேப் சர்கா, பிஷால்கர் தொகுதியில் சுஷாந்தா தேப், கோலாலத்தி தனித் தொகுதியில் ஹிமாந்தி தேப்பர்மா வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டு உள்ளனர்.

 48 வேட்பாளர்கள் அறிவிப்பு

48 வேட்பாளர்கள் அறிவிப்பு

சரிலாம் தனித் தொகுதியில் ஜிஷ்னு தேப்பர்மா, பாக்ஸாநகர் தொகுதியில் தஃப்ஜால் ஹுசைன், நல்சார் தனித்தொகுதியில் கிஷோர் பர்மன், சோனமுரா தொகுதியில் தேபபிரதா பட்டாசார்ஜி, தன்பூர் தொகுதியில் சுஸ்ஸ்ரீ பிரபிதிமா பவ்மிக், கொவாய் தொகுதியில் சுப்ரதோ மஜும்தான், கல்யான்பூர் - பிரமோத்நகர் பினாகி தாஸ் சவுத்ரி, தெலியமுராவில் கல்யாணி ராய் போட்டியிட உள்ளனர்.

தனித்தொகுதி வேட்பாளர்கள்

தனித்தொகுதி வேட்பாளர்கள்

பக்மா தனித் தொகுதியில் ராம் பதா ஜமாதியா, ராதாகிஷோர்பூரில் பிரனாஜித் சிங்கா ராய், மதர்பாரி அபிஷேக் தெப்ராய், கக்ராபன் - சல்கார் தனித்தொகுதியில் ஜிதேந்திர மஜும்தார், ராஜ்நகர் தனித்தொகுதியில் ஸ்வப்னா மஜும்தார், பெலோனியாவில் கவுதம் சர்கார், சந்திரபஜாரில் பிரமோத் ரியாங், ரிஷ்யமுக்கில் திபியான் சவுத்ரியும், மனு தனித்தொகுதியில் மயிலப்ரு மோகும் போட்டியிடுகின்றனர்.

16 ஆம் தேதி தேர்தல்

16 ஆம் தேதி தேர்தல்

சப்ரூமில் சங்கர் ராய், அம்பிநகர் தனித்தொகுதியில் பாடல் கன்யா ஜமாதியாவும், அமர்பூரில் ரஞ்சித் தாஸும், ரைமா வேலி தனித்தொகுதியில் பிகாஸ் சக்மாவும், கமல்பூரில் மனோக் கண்டி தேபும், சுர்மா தனித்தொகுதியில் ஸ்வப்னா தாஸ் பாலும், அம்பாசா தனித்தொகுதியில் சுசித்ரா தேபர்மாவும், சவ்வாமனு தனித்தொகுதியில் சாம்புலால் சக்மாவும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு உள்ளார்கள்.

ஆட்சியில் தொடருமா பாஜக?

ஆட்சியில் தொடருமா பாஜக?

பாபியாச்சரா தனித்தொகுதியில் பாகபன் சந்திர தாஸ், ஃபதிக்ராய் தனித்தொகுதியில் சுதங்க்சு தாஸ், சந்திபூரில் டின்கு ராய், கைலாசாஹரில் மொபோஷர் அலி, கடம்தலா - குர்தியில் திலித் டண்டி, பக்பஸ்ஸாவில் ஜதாப் லால் நாத், தர்மாநாக்ரில் பிஸ்வபந்து சென், ஜுபராஜ்நகரில் மலினா தேப்னாத், பானிசாகரில் பினய் பூஷன் தாஸ், பென்சர்தா தனித்தொகுதியில் சந்தனா சக்மா ஆகியோர் போட்டியிட உள்ளார்கள்.

English summary
The state BJP leadership has released the list of 48 candidates contesting the Tripura Assembly elections.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X