பசுக்களின் முக்கியத்துவம் குறித்து பிரச்சாரம்.. பெங்களூரில் பாஜக இன்று களம் இறங்குகிறது!
பசுக்களை எப்படி பாதுகாக்க வேண்டும் என்று கர்நாடகாவில் பாஜக இன்று பிரச்சாரம் செய்ய இருக்கிறது.
Recommended Video

பெங்களூர்: பாஜக கட்சியில் பல மாநிலங்களில் பசு பாதுகாப்பு செல் என்ற அமைப்பு இருக்கிறது. தென்னிந்தியாவில் கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா போன்ற மாநிலங்களில் மட்டும் இந்த அமைப்பு இல்லை.
கர்நாடகாவில் இருக்கும் இந்த அமைப்பு அங்கு வித்தியாசமான பிரச்சாரம் ஒன்றை செய்ய இருக்கிறது. இன்று பெங்களூரின் தெற்கு பகுதியில் அந்த பிரச்சாரம் நடக்கும்.
தென்னிந்தியாவில் பசு குறித்து நடக்க போகும் பெரிய பிரச்சார பேரணி இதுவாகும். இதில் முக்கியமான பாஜக நிர்வாகிகள் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

என்ன நடக்கும்
இதில் பசுக்களின் முக்கியத்துவம் குறித்து பேசுவார்கள். எப்படி பாதுகாக்க வேண்டும், என்ன மாதிரியான உணவுப்பொருட்கள் கொடுக்க வேண்டும் என்று குறிப்பிடுவார்கள். அதேபோல் எந்த வகையில் பசுக்களை வணங்க வேண்டும் என்றும் இந்த பிரச்சாரத்தில் பேசுவார்கள்.

பயன்கள்
மிக முக்கியமாக பசுக்களின் பயன்கள் குறித்தும் இதில் பேசுவார்கள். கோமியம் தொடங்கி சாணம் வரை என்னென்ன மருத்துவ குணம் இருக்கிறது என்று பேச உள்ளனர். முக்கியமாக ஏன் மாட்டுக்கறி சாப்பிட கூடாது என்றும் பிரச்சாரம் செய்ய உள்ளனர்.

தேர்தலை முன்னிட்டு
கர்நாடகாவில் தேர்தல் நடக்க இருக்கும் சூழ்நிலையில் இந்த பிரச்சாரம் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. இதில் கலந்து கொள்ள இந்தியா முழுக்க இருக்கும் முக்கிய பாஜக தலைவர்கள் வர உள்ளனர். முக்கியமாக கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பா இந்த நிகழ்விற்கு வருவார்.

ராமாயணம்
இந்த நிகழ்வோடு சேர்த்து இன்று முழுக்க ராமாயண புராணம் பேசப்பட இருக்கிறது. அந்த நிகழ்வில் ராமாயணம் குறித்தும், சீதா கல்யாணம் குறித்தும் பேசப்படும். இந்த நிகழ்விற்கு பசுக்களை கொண்டு வரக்கூடாது என்று கட்டளையிடப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications