அள்ள அள்ள ஐநூறு ரூபாய் நோட்டு.. தொக்காய் சிக்கிய பாஜக வேட்பாளர்! சத்தீஸ்கரில் சலசலப்பு
ராய்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் நாளை இரண்டாவது கட்டமாக 70 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இன்று அதிகாலை ரூ.11.50 லட்சம் ரொக்க பணத்துடன் பாஜக வேட்பாளர் ஒருவர் சிக்கியுள்ளார். இச்சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் மொத்தம் 90 சட்டப்பேரவை தொகுதிகள் இருக்கின்றன. முதல் கட்டமாக 20 தொகுதிகளுக்கு கடந்த 7ம் தேதியன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. இரண்டாவது கட்டமாக 70 தொகுதிகளுக்கு நாளை (நவம்பர் 17ம் தேதி) தேர்தல் நடைபெறுகிறது. மாநிலத்தில் மொத்தம் 40.78 லட்சம் வாக்காளர்கள் இருக்கிறார்கள். கடந்த 2 சட்டமன்ற தேர்தல்களில் காங்கிரஸ், பாஜக மாறி மாறி ஆட்சியில் இருந்து வரும் நிலையில், இந்த முறை ஆட்சியை யார் கைப்பற்றுவார்கள் என்கிற எதிர்பார்ப்பு தீவிரமடைந்துள்ளது.

தேர்தல் நெருங்கிய நிலையில் நேற்றுடன் பிரசாரங்கள் ஓய்ந்தன. இந்நிலையில் இன்று அதிகாலை சுமார் 1 மணியளவில் கோர்பா மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் ரூ.11.50 லட்சம் பணத்துடன் பாஜக வேட்பாளர் ஒருவர் சிக்கியுள்ளார். இச்சம்பவம் அம்மாநிலத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. சிக்கியது கார்பா மாவட்டத்தில் உள்ள பாலி-தனகர் தொகுதியின் பாஜக வேட்பாளர் முன்னாள் எம்எல்ஏவான ராம் தயாள் உய்கே என்பவர்தான்.
பாசன் காவல் நிலையத்திற்கு இன்று அதிகாலை 1 மணியளவில் போன் கால் வந்திருக்கிறது. அதில் மறுமுனையில் பேசிய ஜுன்கிடி கிராம மக்கள், தங்கள் பகுதியில் உய்கே பண விநியோகத்தில் ஈடுபட்டு வருவதாக கூறியுள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற பறக்கும் படையினர் உய்கேவின் காரை சோதனையிட்டுள்ளனர். அதில் ரூ.11.50 லட்சம் பணம் இருந்திருக்கிறது. எனவே பணத்தை பறிமுதல் செய்த போலீசார் காரையும் ஸ்டேஷனுக்கு எடுத்து சென்றிருக்கின்றனர்.
அதேபோல இந்த சம்பவத்தின் போது உய்கே காரில் இருந்திருக்கிறார். எனவே அவருக்கு சிக்கல் எழுந்திருக்கிறது. ராம் தயாள் உய்கே, 1998ம் ஆண்டு முதன் முதலாக பாஜக சார்பில் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் காங்கிரஸில் இணைந்து பணியாற்றி வந்தார். இதனையடுத்து தற்போது மீண்டும் பாஜக சார்பில் பாலி-தனகர் தொகுதியில் எம்எல்ஏவாக போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் தனது சிட்டிங் எம்எல்ஏவுக்கு சீட் கொடுக்காமல் பெண் வேட்பாளர் ஒருவரை பாஜக களத்தில் இறக்கியுள்ளது.
மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் கடந்த 9ம் தேதி அமல்படுத்தப்பட்டன. அப்போது முதல் நேற்றைய தேதி வரை சுமார் ரூ.73.90 கோடி மதிப்பிலான கணக்கில் வராத பணம், சட்டவிரோத மதுபானம் மற்றும் பிற பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பறக்கும் படையினர் கூறியுள்ளனர். இதில் ரூ.20.15 கோடி ரொக்க பணம் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications