நானெல்லாம் மாட்டு கறி சாப்பிடாத "இந்து".. ஓயாத பாஜக வேட்பாளர் நடிகை கங்கனா ரனாவத் அக்கப் போர்!
மண்டி: தாம் மாட்டுக் கறி (மாட்டிறைச்சி) சாப்பிடாத ஒரு இந்து என பாஜக வேட்பாளரான நடிகை கங்கனா ரனாவத் விளக்கம் அளித்துள்ளார்.
லோக்சபா தேர்தல் களத்தில் ஏராளமான திரை நட்சத்திரங்களும் களமிறக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சர்ச்சையான கருத்துகள் மூலம் பேசுபொருளாகி இருப்பவர் நடிகை கங்கனா ரனாவத். இவர்தான் மறைந்த தமிழ்நாடு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவாக வெப் சீரிஸில் நடித்தவர்.

தற்போதைய லோக்சபா தேர்தலில் பாஜக வேட்பாளராக இமாச்சல பிரதேசத்தின் மண்டி தொகுதியில் போட்டியிடுகிறார் கங்கனா ரனாவத். அண்மையில் நாட்டின் முதல் பிரதமர் சுபாஷ் சந்திரபோஸ் என ஒரு பதிலளித்து ஒட்டுமொத்த இந்தியாவையே அதிரவைத்தவர் கங்கனா ரனாவத். இது தொடர்பாக நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் குடும்பத்தினர் கூட, கங்கனா ரனாவத்தை கடுமையாக விமர்சித்து கண்டனமும் தெரிவித்திருந்தனர்.
இந்த அக்கப்போர் முடிவதற்குள் கங்கனா ரனாவத்தை மையமாக வைத்து மற்றொரு சர்ச்சை வெடித்தது. அதாவது கங்கனா ரனாவத் தாம் மாட்டிறைச்சி சாப்பிடக் கூடியவர் என கூறியிருந்தவர் என காங்கிரஸ் பொதுவெளியில் போட்டு உடைத்தது. அதாவது 2019 லோக்சபா தேர்தலின் போது கங்கனா ரனாவத் வெளியிட்ட வீடியோ ஒன்றில் தாம் வீட்டை விட்டு வெளியேறிய போது மாட்டிறைச்சி சாப்பிடக் கூடாது என தாயார் தடை விதித்தார். அந்த மாட்டிறைச்சியில் என்னதான் இருக்கிறது என்பதற்காக நான் அதை சாப்பிட்டும் பார்த்தேன். எனக்கு மாட்டிறைச்சி மிகவும் பிடித்திருந்தது என கூறியிருந்தார். அப்போதும் இது சர்ச்சையாக கங்கனா ரனாவத் தரப்பு மறுப்பும் தெரிவித்தது. அதனைத்தான் இப்போது காங்கிரஸ் மீண்டும் நினைவூட்டி விமர்சித்தது.
மேலும் பாஜகவினருக்கு பசுதான் புனிதமான தெய்வம்; மாட்டிறைச்சி வைத்திருந்தாலே கடும் எதிர்ப்பு தெரிவித்து வன்முறைகளை கையில் எடுக்கக் கூடிய நிகழ்வுகள் நடந்திருக்கின்றன. அப்படியான நிலையில் பாஜக வேட்பாளர் கங்கனா ரனாவத், மாட்டிறைச்சி சாப்பிடக் கூடியவர் என்கிற காங்கிரஸ் குற்றச்சாட்டு கங்கனாவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து தற்போது கங்கனா ரனாவத் விளக்கம் அளித்துள்ளார். அதில், தாம் ஒருபோதும் மாட்டிறைச்சி எல்லாம் சாப்பிட்டதே இல்லை. தாம் ஒரு பெருமிதமான இந்து. மாட்டிறைச்சி சாப்பிடமாட்டேன். யோகா மற்றும் ஆயுர்வேத வழிமுறைகளைப் பின்பற்றுகிறேன் என விளக்கம் அளித்திருக்கிறார் கங்கனா.
-
பாஜகவை விட்டு விலகிய முன்னாள் MP நரசிம்மன்.. அண்ணாமலை பேச்சை கேட்டிருந்தா இந்நேரம் பாஜக ஆட்சியாம்! -
அண்ணாமலைக்கும் - விஜய்க்கும் இடையேதான் போட்டி.. உடைத்து பேசிய அமர் பிரசாத் ரெட்டி! -
ஒரு மணி நேரம் நடந்த மீட்டிங்.. ரஜினிகாந்த் மருமகனுக்கு மிகப்பெரிய பொறுப்பை கொடுக்கும் அண்ணாமலை! -
பாஜகவும் திமுகவும் ஒன்னு.. டெல்லிக்கு அதிர்ச்சி கொடுத்த அமர் பிரசாத் ரெட்டி! அண்ணாமலையுடன் ஐக்கியம் -
யூடியூபர் முக்தார் கைது.. அலிசா அப்துல்லா புகாரில் தலைமறைவாக இருந்தவர் மைசூரில் பிடிபட்டார் -
ரஜினிகாந்த் மருமகன் விசாகன்.. அண்ணாமலையின் ‘வி தி லீடர்ஸ்’ இயக்கத்தில் இணையப் போகிறார்? ட்விஸ்ட் -
திராவிட அரசியலை உடைத்த தவெக.. விஜய் வெற்றியால் டென்ஷனான பாஜக? சாணக்கிய அமித்ஷா அடுத்த பிளான் இதுதானா -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா!












Click it and Unblock the Notifications