டெல்லியில் கிரண்பேடி அலுவலகம் சூறை.. ஆம்ஆத்மிதான் காரணம் என்கிறது பாஜக
டெல்லி: டெல்லி சட்டசபைத் தேர்தலில் பாஜகவின் முதல்வர் பதவி வேட்பாளராக களமிறங்கியுள்ள கிரண் பேடியின் கிருஷ்ணாநகர் தொகுதி தேர்தல் அலுவலகத்தில் மர்ம நபர்கள் சிலர் நேற்று மாலை புகுந்து சூறையாடியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி சட்டசபை தேர்தல் வரும் பிப்ரவரி 7-ஆம் தேதி நடைபெற உள்ளது. இத் தேர்தலில் பாஜக முதல்வர் பதவி வேட்பாளர் கிரண்பேடி, கிருஷ்ணா நகர் தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை முன்னிறுத்தி பாஜக தொண்டர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கிருஷ்ணா நகர் தொகுதியில் உள்ள கிரண் பேடியின் தேர்தல் அலுவலகத்தின் உள்ளே, திங்கள்கிழமை மாலை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலர் திடீரென உள்ளே புகுந்து தாக்குதல் நடத்தினர். அலுவலகத்தில் இருந்த மேஜை, கண்ணாடிகள் ஆகியவை அடித்து நொறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், அலுவலகத்தில் இருந்த பாஜக தொண்டர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் காயமடைந்த நபர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன.
தகவலறிந்ததும் கிரண் பேடி தனது பிரசாரத்தை பாதியில் நிறுத்திவிட்டு தாக்குதல் நடத்தப்பட்ட தனது அலுவலகத்துக்கு விரைந்தார். அதன்பின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாஜகவினருக்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்.
இத்தாக்குதல் குறித்து போலீஸார் கூறுகையில், "இத்தாக்குதலில் வழக்கறிஞர்கள் குழுவினர் ஈடுபட்டதாக நாங்கள் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. எனினும், எதற்காக தாக்கினர் என்பது தெரியவில்லை' என்றனர்.
இத்தாக்குதலுக்கு டெல்லி பாஜக தலைவர் சதீஷ் உபாத்யாய் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "இத்தாக்குதலில் ஆம் ஆத்மி கட்சி ஆர்வலர்கள் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆம் ஆத்மி கட்சி தொடங்கப்படும் முன்பு வரை டெல்லியில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்ததில்லை. ஆனால், தற்போது மோசமான தாக்குதல் சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதைக் கருத்தில் கொண்டு டெல்லி மக்கள், ஆம் ஆத்மி கட்சியை நிராகரிக்க வேண்டும்' என்றார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications