ராஜஸ்தானிலும் பாஜக 'போங்கு' ஆட்டம்.. 25 எம்.எல்.ஏக்கள் போர்க்கொடியாம்.. கவிழும் காங். அரசு?
ஜெய்ப்பூர்: லோக்சபா தேர்தல் முடிவுகளால் பாஜக ஆட்சி செய்யாத மாநில அரசுகள் ஆட்டம் காணத் தொடங்கிவிட்டன. மேற்கு வங்கம், மத்திய பிரதேசத்தைத் தொடர்ந்து ராஜஸ்தானில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி தூக்கி உள்ளன.
அண்மையில் நடைபெற்ற மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தல்களில் காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றியது. ஆனால் லோக்சபா தேர்தலில் இம்மாநிலங்களில் காங்கிரஸ் மரண அடி வாங்கியது.

25 எம்.எல்.ஏக்கள் அதிருப்தி
இதனால் காங்கிரஸ் மேலிடம் இம்மாநில தலைமைகள் மிகக் கடும் அதிருப்தியில் இருக்கின்றன. இந்த நிலையில் ராஜஸ்தானில் ஆளும் காங்கிரஸ் அரசு மீது அக்கட்சியின் 25 எம்.எல்,ஏ.க்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர் என்கிறது பாஜக.

பாஜக கருத்து
இது தொடர்பாக பாஜக ராஜஸ்தான் மாநில துணைத் தலைவர் ஞான்தேவ் அஹுஜா கூறுகையில், ராஜஸ்தான் அரசை ஆதரிக்கும் பகுஜன் சமாஜ எம். எல். ஏக்களும் அதிருப்தியில் உள்ளனர். 20 முதல் 25 காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும் அதிருப்தி அடைந்திருக்கின்றனர்.

காங். அரசு கவிழும்
காங்கிரஸ் அரசை நாங்கள் கலைக்க வேண்டியது இல்லை. அந்த அரசே கலைந்துவிடும் நிலையில்தான் இருக்கிறது. ஓரிரு நாட்களில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ராஜினாமாக்கள் நடைபெறுமமென்றார்.

மாநில அரசுகள் நிலவரம்
ஏற்கனவே மேற்கு வங்கத்தில் திரிணாமுல் அரசை கலகலக்க வைத்துக் கொண்டிருக்கிறது பாஜக. மத்திய பிரதேச ஆட்சிக்கு மேலே கத்தி தொங்கிக் கொண்டிருக்கிறது. கர்நாடகாவிலும் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்கிற சூழல். இந்த வரிசையில் தற்போது ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் அரசுக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
-
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி!












Click it and Unblock the Notifications