Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜம்மு காஷ்மீரில் செம டிவிஸ்ட்! பனி போல் உருகி காற்றில் கரைந்த பாஜக தலைவரின் நம்பிக்கை!

Subscribe to Oneindia Tamil

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலில் 35 இடங்களில் பாஜக வென்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை அமைப்போம் என அந்த யூனியன் பிரதேசத்தின் தலைவர் ரவீந்தர் ரைனா நம்பிக்கை தெரிவித்திருந்த நிலையில் திடீர் ட்விஸ்ட்டாக தேசிய மாநாட்டு கட்சி 41 இடங்களில் வென்று காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைக்க போகிறது.

ஜம்மு காஷ்மீரில் 370 சட்டப்பிரிவு நீக்கத்திற்கு பிறகு முதல் முறையாக 5 ஆண்டு சட்டசபை பதவிக்காலத்தை கொண்ட தேர்தல் நடைபெற்றுள்ளது. அதாவது இதற்கு முன்னர் எல்லா மாநிலங்களுக்கும் 6 ஆண்டுகள் சட்டசபையின் பதவிக்காலமாக இருந்தது. ஆனால் 1970களில் 5 ஆண்டுகளாக குறைக்கப்பட்டது.

jammu kashmir assembly election results 2024 jammu kashmir assembly election 2024 2024

எனினும் ஜம்மு காஷ்மீருக்கு மட்டும் அதே 6 ஆண்டுகளே இருந்தது. அதன்படி அது போல் 2014 ஆம் ஆண்டு கடைசியாக சட்டசபை தேர்தல் நடத்தப்பட்டது. அதன் பிறகு 2019ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டதை அடுத்து அதை எதிர்த்த அரசியல் கட்சித் தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இதனால் அங்கு பரபரப்பான சூழல் இருந்தது. ஜம்மு காஷ்மீருக்கு தேர்தலை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து தற்போது சட்டசபை தேர்தல் 3 கட்டங்களாக நடந்தது. செப்டம்பர் 18, செப்டம்பர் 25, அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் தேர்தலானது நடத்தி முடிக்கப்பட்டது. இந்த தேர்தலில் 63.88 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன.

இனி ஜம்மு காஷ்மீர் சட்டசபையின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் என 370 சட்டப்பிரிவு நீக்கப்பட்டதுமே சட்டம் கொண்டு வரப்பட்டு தற்போது தேர்தல் நடத்தப்பட்டது. மொத்தம் 90 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் நடந்து முடிந்துள்ளது. தேர்தலில் ஆட்சியை பிடிப்பதற்கு 46 இடங்கள் வேண்டும். இந்த தேர்தலில் 1,031 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அது போல் 20,632 வாக்குச் சாவடி மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

இந்த தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை இன்று தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை தொடங்குவதற்கு முன்னர், அந்த யூனியன் பிரதேசத்தின் பாஜக தலைவர் ரவீந்தர் ரைனா செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறியிருப்பதாவது: ஜம்மு காஷ்மீர் சட்டசபையின் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகிறது. இங்கு பாஜக தனிப்பெரும்பான்மை பெற்ற கட்சியாக உருவெடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

சுயேச்சை வேட்பாளர்கள், காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள பாஜக ஆதரவு அமைப்பினரின் ஆதரவுடன் பாஜக ஆட்சி அமைக்கும். தேசிய மாநாட்டுக் கட்சிதான் ஆட்சியை பிடிக்கும் என கூறியுள்ளதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அவர்கள் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை வைத்து தெரிவித்துள்ளனர். அவையெல்லாம் உண்மையான தேர்தல் முடிவுகளாக இருக்காது.

ஜம்மு காஷ்மீர் தேர்தல் பிரச்சாரத்தின் போது பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோருக்கு மக்கள் கொடுத்த வரவேற்பை வைத்து பார்க்கும் போது பாஜக தனிப்பெரும்பான்மையை பிடிக்கும். இந்து, முஸ்லீம், சீக்கியர்கள், குஜ்ஜர்கள், பகர்வால்கள், பஹாரிஸ்களில் உள்ளிட்ட பலதரப்பு மக்களுக்கு நியாயத்தை வழங்குவோம் என பிரதமர் உறுதியளித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மக்கள் பாஜகவுக்கு மனப்பூர்வமான ஆதரவை கொடுத்ததால் நீங்கள் 35 இடங்களில் வெல்வோம். அது போல் சுயேச்சைகள், காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள பாஜக ஆதரவு அமைப்புகளின் ஆதரவுடன் ஆட்சியை அமைப்போம் என தெரிவித்திருந்தார். ஆனால் இன்று வெளியான தேர்தல் முடிவுகள் டிவிஸ்ட்டை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது மொத்தம் இருக்கும் 90 தொகுதிகளில் 89 இடங்களுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. அதில் 41 இடங்களில் தேசிய மாநாட்டு கட்சியும் 6 இடங்களில் காங்கிரஸ் கட்சியும் வென்றுள்ளது. அது போல் பாஜக 27 இடங்களில் மட்டுமே வென்றுள்ளது. தேசிய மாநாட்டு கட்சியும் காங்கிரஸும் சேர்ந்து கூட்டணி அமைந்ததால் ஆட்சி அமைக்கத் தேவையான 46 இடங்கள் இருக்கின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+