For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆர்.எஸ்.எஸ். மிரட்டலுக்கு அடிபணிந்தது பாஜக: திக்விஜய்சிங்

By Mathi
Google Oneindia Tamil News

BJP has succumbed to RSS threats: Digvijay Singh
டெல்லி: நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவித்த விவகாரத்தில் ஆர்.எஸ்.எஸ். மிரட்டலுக்கு பாரதிய ஜனதா கட்சி அடிபணிந்துவிட்டது என்று காங்கிரஸ் பொதுச்செயலர் திக்விஜய்சிங் சாடியுள்ளார்.

குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக நேற்று பாஜக அறிவித்தது. இது தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டிருக்கும் திக்விஜய்சிங், குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் அமைப்பும் ராம்தேவும் பாஜகவை மிரட்டி வந்தனர். அதற்கு பாஜக அடிபணிந்து விட்டது என்று கூறியுள்ளார்.

காங்கிரஸ் பொதுச்செயலர் ஷகீல் அகமது கூறுகையில், அத்வானி, சுஷ்மா ஸ்வராஜை ஓரங்கட்டுவதற்காக ஆர்.எஸ்.எஸ். உதவியுடன் மோடியை ராஜ்நாத்சிங் கொண்டுவந்திருக்கிறார் என்று கூறியுள்ளார்.

English summary
Congress General Secretary Digvijay Singh today took potshots at BJP over announcing Narendra Modi as its Prime Ministerial candidate, saying the party has succumbed to threats from the RSS and wondered if the Sangh could still call itself a "cultural organisation".
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X