பாஜகவின் ”தி கிரேட் இந்தியன் கொள்ளை” - கேஸ் விலையேற்றத்தை கடுமையாக சாடிய மம்தா பானர்ஜி
கொல்கத்தா: கேஸ் சிலிண்டர், எரிபொருள் விலையை உயர்த்தி மக்களை துன்புறுத்துவதை மத்திய அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
Recommended Video

பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் தொடர்ந்து தமிழகத்தில் வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் ரூ.50 அதிகரித்துள்ளது. இதன் மூலம் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.1,015-க்கு விற்பனையாகிறது.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710 ஆக இருந்தது. இதனை மாதத்துக்கு ஒன்று அல்லது இருமுறை ரூ.25 அல்லது ரூ.50 என்ற கணக்கில் எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வந்தன. தற்போது வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை கடந்த அக்டோபர் மாதம் ரூ.915.50 ஆக அதிகரித்தது.
4 மாதத்துக்கு பின் கடந்த மாதம் மீண்டும் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியதன் மூலம், அது ரூ.965.50 ஐ தொட்டது. இந்த நிலையில் இந்த மாதமும் ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் பார்த்தால் கடந்த 16 மாதங்களில் மட்டும் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.307 அதிகரித்து ரூ.1000-ஐ கடந்துள்ளது.

இதற்கு பல்வேறு தரப்பினர் தங்கள் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியும் ட்விட்டரில் கண்டனப் பதிவை வெளியிட்டுள்ளார். அதில், "மத்திய அரசு மக்களை துன்புறுத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும்.
மீண்டும் மீண்டும் பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் சிலிண்டர் விலையையும் அத்தியாவசிய பொருட்கள் விலையையும் உயர்த்துவதன் மூலம் மிகப்பெரிய கொள்ளையை பாஜக அரங்கேற்றி வருகிறது. மக்கள் முட்டாளாக்கப்பட்டு வருகின்றனர். ஊடகங்கள் ஊமையாகவும் பார்வையற்றவர்களாகவும் இருப்பது கவலை தருகிறது." எனக் குறிப்பிட்டு உள்ளார்.
-
மம்தாவுக்கு புது பிரச்சனை.. இரண்டாக உடையும் திரிணாமுல் காங்கிரஸ்! யார் அந்த கருப்பு ஆடு? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications