Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தேர்தல் வாக்குறுதி + வெற்றிக்கான வியூகம்.. ஜம்மு காஷ்மீரில் முழு பலத்துடன் களமிறங்குகிறது பாஜக

Subscribe to Oneindia Tamil

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில், பாஜக தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து மீண்டும் கொண்டு வர முடியாது என்று பாஜக உறுதியாக கூறியுள்ளது. அதேபோல வெற்றிக்கான வியூகத்தையும் வகுத்திருக்கிறது.

மக்களவை தேர்தல் சலசலப்பு தற்போதுதான் ஓய்ந்திருக்கும் நிலையில், மாநில சட்டசபைக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக ஜம்மு காஷ்மீரில் அதன் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு, தற்போது தேர்தல் நடத்தப்படுவதால் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. 90 சட்டசபை தொகுதிகளை கொண்ட ஜம்மு காஷ்மீர் சட்டசபைக்கு மூன்று கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது.

jammu and kashmir jammu and kashmir assembly elections bjp

அதாவது முதல் கட்ட தேர்தல் செப்.18ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் ஆக.20ம் தேதி தொடங்குகிறது. வேட்புமனுவை தாக்கல் செய்ய கடைசி நாள் ஆக.27ம் தேதி. அதேபோல ஆக.30 வேட்புமனுவை வாபஸ் பெற கடைசி நாளாகும். இரண்டாம் கட்ட தேர்தல் செப்.25ம் தேதி நடக்கிறது. இதற்கு வேட்புமனு தாக்கல் ஆக.29ம் தேதி தொடங்குகிறது. செப்.5ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள். செப்.9 வேட்புமனுவை வாபஸ் பெற கடைசி நாளாகும்.

மூன்றாம் கட்ட தேர்தலின் வாக்குப்பதிவு அக்டோபர் மாதம் 1ம் தேதி நடக்கிறது. இதற்கு வேட்புமனு தாக்கல் செப்.5ம் தேதி தொடங்குகிறது. செப்.12ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள். செப்.17 வேட்புமனுவை வாபஸ் பெற கடைசி நாளாகும். மூன்று கட்டங்களில் பதிவாகும் வாக்குகள் அக்டோபர் மாதம் 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே வெளியாகின்றன.

இந்நிலையில், பாஜகவின் வெற்றி வியூகம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது, மக்களவை தேர்தலில் இந்துக்கள் அதிகம் உள்ள தொகுதிகளில் காங்கிரஸுக்கு பெரும்பான்மை கிடைத்தது. ஆனால், தேசிய மாநாட்டு கட்சி தனது தேர்தல் வாக்குறுதியாக, "ஹரி/சங்கராச்சாரியார் மலையின் பெயரை தக்த்-இ-சுலைமான் மாற்றுவோம்" என்று கூறியிருக்கிறது. அதேபோல, அடிக்கடி மோதலை தவிர்க்க பாகிஸ்தானுடன், இந்தியா பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் கூறியிருந்தது. இது போதுமே பாஜக தனது வாக்குவங்கியை உயர்த்த.

காங்கிரஸ், ஆர்டிகள் 370 ரத்து பிரச்னையை கையில் எடுத்தால்.. அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தேசிய மாநாட்டு கட்சியின் வாக்குறுதியை பாஜக கையில் எடுக்கும். மொத்தமுள்ள 90 தொகுதிகளில் 47 இடங்கள் காஷ்மீரிலும், 43 இடங்கள் ஜம்முவிலும் உள்ளன. ஜம்மு பிராந்தியத்தில் இந்துக்கள் ஆதிக்கம் செலுத்தும் 30 தொகுதிகளிலும் எப்படியும் வெற்றி பெற்றுவிட வேண்டும் என்று பாஜக உறுதியாக இருக்கிறது.

அதிலும் ரஜோரியில் 7 தொகுதிகளில் பாஜக கொடியை தவிர வேறு கொடி எதுவும் பறக்க கூடாது என்று கங்கணம் கட்டிக்கொண்டு வேலை பார்த்து வருகிறது. மக்களவை தேர்தல் முடிவுகளும், பாஜகவுக்கு சாதகமாகத்தான் இருக்கின்றன. அதாவது 29 சட்டமன்ற தொகுதிகளில் பாஜகதான் டாப்.

காஷ்மீரை பொறுத்தவரை, பள்ளத்தாக்கில் உள்ள 25 சட்டமன்றத் தொகுதிகளில் மட்டுமே பாஜக போட்டியிட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹப்பக்கடல், பாரமுல்லா உள்ளிட்ட பள்ளத்தாக்கின் வேறு சில இடங்களில் பண்டிட்களை வேட்பாளராக நிறுத்தலாம் என்றும் சொல்லப்படுகிறது. ஏனெனில் இந்த பகுதியில் இடம் பெயர்ந்த பண்டிட்கள் சுமார் 1.22 லட்சம் பேர் இருக்கின்றனர். இது மிகப்பெரிய வாக்கு வங்கி.

மீதமுள்ள 22 இடங்களில் சுயேச்சைகள் மற்றும் உள்ளூர் கட்சிகளின் வேட்பாளர்களை பாஜக ஆதரிக்க முடிவெடுத்திருக்கிறது. இப்படியாக பாஜகவும் தனது வெற்றி வியூகத்தை வகுத்திருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+