விஷ மனிதர்கள் நிரம்பிய கட்சி பாஜக- சோனியா காந்தி
கோட்டா, ராஜஸ்தான்: விஷத்தன்மை கொண்டவர்கள் நிறைந்த கட்சியாக பாஜக திகழ்கிறது என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் நடந்த கூட்டத்தில் அவர் பேசுகையில், விஷ மனிதர்கள் நிரம்பிய கட்சி பாஜக. அவர்கள் பொய்களையும், வதந்திகளையும் தவிர வேறு எதையும் பரப்புவதில்லை.
ராஜஸ்தான் அரசிந் இலவச மருத்துவத் திட்டம் குறித்து பொய்யான தகவல்களை அவர்கள் பரப்பி வருகிறார்கள். இந்த மருந்துகள் விஷத்தன்மை கொண்டவை என்று அவர்கள் கூறுகிறார்கள். உண்மையில் விஷத்தன்மை நிறைந்தவர்கள் பாஜகவினர்தான்.

பொய்களை உண்மை போல பேசுகிறார்கள் பாஜகவினர். ஆட்சியைப் பிடிக்க வேண்டும், அதிகாரத்தை அனுபவிக்க வேண்டும் என்ற வெறிதான் இதற்குக் காரணம்.
ராஜஸ்தான் அடைந்துள்ள வளர்ச்சியைப் பார்க்க மறுக்கிறது பாஜக. மாறாக இருளை மட்டுமே பார்க்கிறது என்றார் சோனியா.
ராஜஸ்தான் சட்டசபைக்கு டிசம்பர் 1ம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. அசோக் கெலாட் தலைமையிலான ராஜஸ்தான் அரசு அங்கு பாஜகவிடமிருந்து பெரும் சவாலை எதிர்கொண்டுள்ளதால் பிரசாரமும் படு சூடாகவே காணப்படுகிறது.
-
பாஜகவுக்கு ‘குட்பை'.. அண்ணாமலைக்காக ரெடியான ராஜ்யசபா சீட் இப்போ யாருக்கு பாருங்க! -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
பாஜகவில் இருந்து விலகிய கரு நாகராஜன்.. அண்ணாமலை தொடங்கிய இயக்கத்தில் இணைந்தார்! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை போய்ட்டாரு.. ஆந்திராவில் எதுக்கு ராஜ்யசபா சீட்டு.. கைவிட்ட பாஜக -
பாஜகவின் பிளான் 'பி'.. அண்ணாமலை பின்னால் ஆர்எஸ்எஸ்! மாணிக்கம் தாகூர் வார்னிங்! -
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார் -
அண்ணாமலை புதிய அரசியல் இயக்கம் அறிவிப்பு.. அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிட போவதாகவும் அதிரடி -
Annamalai: புதிய கட்சியா.. பாஜகவில் நீடிப்பாரா.. நாளை 12 மணிக்கு முடிவை அறிவிக்கும் அண்ணாமலை? -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்!












Click it and Unblock the Notifications