பாராமதியில் எதிரிகளாக பவார் குடும்பம்! அத்தியாத்தையே 'முடித்து'விட ஆர்.எஸ்.எஸ்.- பாஜக மும்முரம்!
பாராமதி: மகாராஷ்டிராவின் பாராமதி லோக்சபா தொகுதியில் முதுபெரும் அரசியல் தலைவர் சரத்பவாரின் குடும்பத்தினரே எதிரும் புதிருமாக களம் காண்கின்றனர். இத்தேர்தலுடன் சரத்பவார் குடும்ப அரசியலையே முடித்துவிட வேண்டும் என்பதில்தான் ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதன் அரசியல் கட்சியான பாஜகவும் மும்முரமாக உள்ளன.
மகாராஷ்டிராவில் காங்கிரஸின் முகமாக பல்லாண்டுகாலம் கோலோச்சியவர் சரத்பவார். 1990களில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவி விவகாரத்தில் அதிருப்தி அடைந்து தேசியவாத காங்கிரஸ் கட்சியைத் தொடங்கினார் சரத்பவார். பாஜகவுடனும் நெருக்கம்.. காங்கிரஸ் கட்சியும் இடம் பெற்றுள்ள "இந்தியா" கூட்டணியிலும் இடம் என இரு கட்சிகளுடனும் தோழமை பாராட்டுகிறவர் சரத்பவார். ஆனாலும் பாஜகவோ சரத்பவாரின் அரசியல் அத்தியாயத்தை காலி செய்வதில்தான் படுதீவிரமாக இருக்கிறது.

பாராமதியில் குடும்ப மோதல்: சரத்பவாரின் அண்ணன் மகனான அஜித்பவாரை வைத்துதான் அவரது அரசியல் அத்தியாத்துக்கு முடிவுரை எழுதுகிறது பாஜக. தேசியவாத காங்கிரஸையே அஜித்பவார் மூலம் இரண்டாக உடைத்தது பாஜக. இப்போது அஜித்பவார், மகாராஷ்டிரா பாஜக கூட்டணி அரசில் துணை முதல்வர். அத்துடன் நிற்கவில்லை. சரத்பவாரின் கோட்டையான பாராமதி லோக்சபா தொகுதியில் அவரது மகள் சுப்ரியா சுலேவை எதிர்த்து அஜித்பவாரின் மனைவி சுனேத்ரா பவார் போட்டியிடுகிறார். லோக்சபா தேர்தலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கக் கூடிய தொகுதிகளில் மகாராஷ்டிராவின் பாராமதியும் ஒன்று.
பாராமதி கோட்டை: 1967-ம் ஆண்டு பாராமதி சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு வென்றவர் சரத்பவார். 1967-ல் தொடங்கி 1995 வரை தொடர்ந்து பாராமதியில் வென்று முடிசூடா மன்னராக கொடிகட்டிப் பறந்தவர் சரத்பவார். அவருக்குப் பின்னர் சரத்பவாரின் அண்ணன் மகன்/ இப்போது பரம எதிரியாகிவிட்ட அஜித்பவார்தான் பாராமதி சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ. அதாவது 1967-ம் ஆண்டு முதல் தற்போது வரை சரத்பவாரின் கோட்டையாக இருப்பது பாராமதி சட்டசபை தொகுதிதான். லோக்சபா தேர்தலைப் பொறுத்தவரையில் 1984-ல் சரத்பவார் போட்டியிட்டு எம்பியானார். 1991க்குப் பின் 1996, 1998, 1999, 2004-ம் ஆண்டு வரை சரத்பவார்தான் தொடர்ச்சியாக எம்பியாக இருந்து வந்தார்.
ஹாட்ரிக் வெற்றி சுப்ரியா சுலே: 2009, 2014, 2019 ஆகிய 3 லோக்சபா தேர்தல்களிலும் சரத்பவாரின் மகள் சுப்ரியா சுலேதான் எம்பி. 2009-ம் ஆண்டு தேர்தலில் சுப்ரியா சுலே, 66.46% வாக்குகளைப் பெற்றார். அத்தேர்தலில் பாஜக வேட்பாளர் பெற்ற வாக்குகள் வெறும் 20.57% மட்டுமே. 2014-ம் ஆண்டு தேர்தலில் சுப்ரியா சுலே 48.88%; 2019-ல் 52.63% வாக்குகளைப் பெற்று ஹாட்ரிக் வெற்றியை அறுவடை செய்தார். இம்முறை சரத்பவாரின் அண்ணன் மகன் அஜித்பவாரின் மனைவி- சரத்பவாரின் மருமகள் சுனேத்ரா அஜித்பவார், மகள் சுப்ரியா சுலேவை வீழ்த்த களம் காண்கிறார்.
பாஜகவின் செம்ம ஸ்கெட்ச்: பாஜகவைப் பொறுத்தவரை தென்னிந்தியாவின் எந்த மாநிலங்களிலும் வலுவாக காலூன்ற முடிவதில்லைதான். கர்நாடகாவில்தான் பாஜகவால் கணிசமான பலத்துடன் நிற்க முடிகிறது. தென்னிந்திய மாநிலங்களை ஒட்டிய மகாராஷ்டிராவில் எதிரிகளே இல்லாத நிலைமையை உருவாக்குவதில் பாஜக முனைப்புடன் இருக்கிறது. இதனால்தான் நெடுநாள் கூட்டணி கட்சியான சிவசேனாவையே உடைத்தது பாஜக. சிவசேனாவை உடைத்த ஈரம் காய்வதற்குள் சரத் பவார் கட்சியை சிதறடித்தது பாஜக.
சரத்பவார் சாம்ராஜ்ஜியம் சரியுமா?: உடைக்கப்பட்ட சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் எத்தனை காலம் தாங்கும் என தெரியாது. எப்படியாவது பாஜகவில்தான் ஐக்கியமாக நேரிடும். தற்போதைக்கு பாஜகவின் பிரதான எதிரியாக இருப்பது மகாராஷ்டிராவில் சரத்பவார் மட்டும்தான். அதுவும் பாராமதி கோட்டையிலேயே சரத்பவார் மகளை தோற்கடித்துவிட்டால் அவரது அரசியல் அத்தியாத்தையே இலகுவாக முடித்துவிடலாம்; அதாவது சரத்பவார் கண்களை அவரது ரத்த உறவுகளின் கைகளாலேயே குத்திவிட்டுவிடலாம் என கணக்குப் போட்டு களமாடுகிறது பாஜக. இதனை உணர்ந்துகொண்டுதான் சரத்பவாரும் அரை நூற்றாண்டு கால அரசியல் எதிரிகளைக் கூட தேடிப் போய் தமது மகளுக்காக தள்ளாத வயதிலும் ஆதரவு கேட்டு பாடாய்படுகிறார். சரத்பவாரின் சாம்ராஜ்ஜியம் என்னவாகும் என்பது ஜூன் 4-ந் தேதி தெரிந்துவிடுமே!
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications