பிரதமர் மோடியை எதிர்த்து விரல்களை நீட்டி பேசினால் கைகள் வெட்டப்படும் .. பாஜக தலைவர் ஆவேசம்
சிம்லா: பிரதமர் மோடியை எதிர்த்து விரல்களை நீட்டி பேசுபவர்களிள் கைகள் துண்டிக்கப்படும் என ஹிமாச்சல் பிரதேச பாஜக மாநில தலைவர் சத்பால் சிங் சத்தி ஆவேசமாக பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
மக்களை தேர்தல் நாடு முழுவதும் நடந்து வருகிறது. கடந்த 23ம் தேதியுடன் 3 கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்துவிட்டது.
இன்னும் நான்கு கட்டங்களாக உத்தரப்பிரதேசம், ஹிமாச்சல் பிரதேசம், மகாராஷ்டிரா உள்பட பல்வேறு மாநிலங்களில் மக்களவை தேர்தல் நடக்க உள்ளது.

தீவிர வாக்கு சேகரிப்பு
இதன் காரணமாக அனைத்து கட்சிகளும் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. ஒவ்வொரு கட்சியினரும் மேடையில் பேசி வாக்கு சேகரிக்கும் போது எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து பேசிவருகிறார்கள்.

மோசமாக திட்டினார்
இந்நிலையில் ஹிமாச்சல் பிரதேச மாநில தலைவர் சத்பால் சிங் சத்தி, அண்மையில் ராகுல் காந்தி குறித்து வரம்புமீறி சர்ச்சைக்குரிய வகையில் பேசி சிக்கினார். பிரதமர் மோடியை திருடன் என சொல்லும் ராகுல் காந்தியை, அவரது தாய் சோனியா காந்தியை, அவரது மச்சான் ஆகியோரை பிணையில் வராத முடியாத அளவுக்கு ஜெயிலில் போடவேண்டும் என்று பேசினார். மேலும் மிக மோசமாக ராகுலை அவர் திட்டினார்.

இரண்டு நாள் தடை
இதனால் சத்பால் சிங் சத்தி பிரச்சாரம் செய்வதற்கு தேர்தல் ஆணையம் கடந்த வெள்ளிக்கிழமை தடைவிதித்தது. இதன்படி அவர் இரண்டு நாட்கள் எங்குமே பிரச்சாரத்தில் ஈடுபடவில்லை.

மோடியை பேசினா
இந்நிலையில் நேற்று ஹிமாச்சலின் மண்டி நகரில் நடந்த பிரச்சாரத்தின் போது சத்பால் சிங் சத்தி மிகவும் ஆவேசமாக எதிர்க்கட்சி திட்டிபேசினார். அப்போது பிரதமர் மோடியை எதிர்த்து யாராவது விரல்களை நீட்டி பேசினால், அவர்களின் கைககள் துண்டிக்கப்படும் என ஆவேசமாக தெரிவித்தார். சத்பால் சிங் சத்தியின் இந்த பேச்சுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
-
காலையில் ஆருயிர் தம்பி.. மதியம் மாற்றி பேசிய நயினார் நாகேந்திரன்! அண்ணாமலை விலகல் குறித்து ஓபன் டாக் -
பாஜகவுக்கு ‘குட்பை'.. அண்ணாமலைக்காக ரெடியான ராஜ்யசபா சீட் இப்போ யாருக்கு பாருங்க! -
அண்ணாமலை புதிய அரசியல் இயக்கம் அறிவிப்பு.. அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிட போவதாகவும் அதிரடி -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
அண்ணாமலை போய்ட்டாரு.. ஆந்திராவில் எதுக்கு ராஜ்யசபா சீட்டு.. கைவிட்ட பாஜக -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா!












Click it and Unblock the Notifications