காங்கிரஸை கலைக்கச் சொன்ன காந்தியின் கனவை தேர்தலில் நிறைவேற்றுவோம்- மோடி சூளுரை!
போபால்: காங்கிரஸை கலைக்க வேண்டும் என்று மகாத்மா காந்தியின் கனவை லோக்சபா தேர்தலில் நிறைவேற்றுவோம் என்று பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி சூளுரைத்துள்ளார்.
மத்திய பிரதேச மாநிலத் தலைநகர் போபாலில் இன்று நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் பிரசாரக் கூட்டத்தில் மோடி பேசியதாவது:

காந்தியின் கனவு
மகாத்மா காந்தியின் கனவை நிறைவேற்றும் வகையில் காங்கிரஸ் பிடியில் இருந்து இந்தியாவை விடுவிப்போம்.

நாடெங்கும் பாஜக அலை
நாடு முழுவதும் பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவான அலையே வீசுகிறது. நிச்சயம் மத்தியில் ஆட்சி அமைப்போம்.

பாஜக முதல்வர்களுக்கு பாராட்டு
அனைத்து கருத்து கணிப்புகளுமே பாஜக முதல்வர்களான ரமண்சிங், சிவ்ராஜ்சிங் செளகானைப் பாராட்டியே வெளியாகின்றன.

ம.பிக்கு பாரபட்சம்
மத்திய பிரதேசத்தில் 10 ஆண்டுகால அதிகாரப் பசியில் காங்கிரஸ் அலைகிறது.. அதனாலேயே மத்திய பிரதேச அரசின் வளர்ச்சி திட்டங்களுக்கு மத்திய அரசு முட்டுக் கட்டை போட்டு வருகிறது.

காங்கிரஸ் போட்டியிடாது
வரும் லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிடாது. அதற்குப் பதிலாக சிபிஐதான் தேர்தலில் போட்டியிடப் போகிறது.

வழிகாட்டும் விளக்கு
எங்களுக்கு வழிகாட்டும் விளக்காக திகழ்கிறவர் அத்வானி ஜி.

தீனதயாள் உபாத்யாவின் நூற்றாண்டில் ஆட்சியில் நாம்
தீனதயாள் உபாத்யாவின் நூற்றாண்டு 2015-16ல் வருகிறது. அப்போது நிச்சயம் மத்தியில் பாரதிய ஜனதா ஆட்சியில் இருக்கும்.

பாஜகவினர் கடமை
மத்தியில் பாரதிய ஜனதா ஆட்சி அமைய வேண்டுமெனில் ஒவ்வொரு பாஜகவினரும் வாக்குச் சாவடிக்கு வாக்குகள் பதிவாவதை உறுதி செய்ய வேண்டும் என்றார்.


Click it and Unblock the Notifications
