போலீஸ் குதிரை கால் உடைப்பு வழக்கில் திடீர் திருப்பம்.. பாஜக தொண்டர் கைது! எம்.எல்.ஏவுக்கு நிம்மதி
டேராடூன்: உத்தரகண்ட் மாநிலத்தில் நடந்த பாஜக ஆர்ப்பாட்டத்தின்போது, போலீஸ், குதிரையின் காலை உடைத்ததாக பாஜக எம்.எல்.ஏ. கணேஷ் ஜோஷி குற்றச்சாட்டுக்கு உள்ளான நிலையில், வழக்கில் திடீர் திருப்பமாக, குதிரையை தாக்கியதாக பாஜக தொண்டர் பிரமோத் போரா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
உத்தரகண்ட் மாநில தலைநகர் டேராடூனில் கடந்த திங்கட்கிழமை பாஜக சார்பில் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராக, பேரணி நடந்தது.

அப்போது போலீசார் லத்தி சார்ஜ் நடத்தியுள்ளனர். அப்போது பாஜக எம்.எல்.ஏ. கணேஷ் ஜோஷி போலீஸ் லத்தியை பிடுங்கி, காவல்துறையின் ரோந்து குதிரையான சக்திமானை அடித்து அதன் ஒரு காலை ஒடித்தார் என ஊடகங்களில் செய்தி வெளியானது.
இதையடுத்து பான்ட்நகர் கால்நடை மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த மருத்துவர்கள் குழு சக்திமானுக்கு அறுவை சிகிச்சை செய்து காலை சரியாக்கியுள்ளது.

சக்திமானின் காலில் ஏற்பட்ட காயத்தால் அதன் காலை வெட்டவேண்டிய தேவை இல்லை என்று மருத்துவர்கள் கூறினர் என மூத்த போலீஸ் அதிகாரி சதானந்த் தாதே தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஜோஷி குதிரை சக்திமான் எப்படி உள்ளது என்பதை பார்க்க இன்று அது இருக்கும் இடத்திற்கு சென்றுள்ளார். அதற்கு கேரட் கொடுத்தார். மேலும், தான் தவறு செய்தது நிரூபணமானால் தனது காலை வெட்டி தரவும் சம்மதம் என்றும் கூறியிருந்தார்.

இந்நிலையில் போலீசார் சிசிடிவி பதிவுகளை வைத்து நடத்திய ஆய்வில், குதிரையை அடித்தது கூட்டத்தில் பங்கேற்ற பாஜக தொண்டர் பிரமோத் போரா என்பது தெரியவந்தது. அவர் இன்று கைது செய்யப்பட்டார்.
தொலைக்காட்சி செய்திகளை பார்த்த நடிகை திரிஷா, கணேஷ் ஜோஷி நரக நெருப்பில் எரிவார் என்று சாபம் விட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications