பார்க்க பல்க்கா இருக்காரே.. கையில் துப்பாக்கி வேற இருக்கே.. இவர் யார்னு தெரியுமா.. ஷாக் வீடியோ!

Subscribe to Oneindia Tamil

டேராடூன்: உத்தரகண்டை சேர்ந்த பாஜக எம்எல்ஏ பிரணவ் சிங் குடிபோதையில் துப்பாக்கியுடன் நடனமாடும் வீடியோ வைரலாகி வருகிறது. ஒன்றல்ல, 4 துப்பாக்கிகளுடன் நடனம்.

பாஜக எம்எல்ஏ பிரணவ் சிங் பத்திரிகையாளரை மிரட்டிய விவகாரத்தில் அக்கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். இந்த நிலையில் அவர் தனது வீட்டில் மது அருந்தி விட்டு தனது ஆதரவாளர்களுடன் நடனம் ஆடும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

BJP MLA Pranav Champion seen in a viral video brandishing guns

அவர் கையில் மதுவுடனும் 4 துப்பாக்கிகளுடனும் நடனம் ஆடியுள்ளார். அத்துடன் துப்பாக்கியை வாயில் பிடித்தபடியும் நடனம் ஆடினார். இதுதொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த துப்பாக்கிகளுக்கு பிரணவ் உரிமம் பெற்றாரா என்பது குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.

இதுகுறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் அனில் புலானி கூறுகையில் பிரணவ் டான்ஸ் ஆடும் வீடியோவை நானும் பார்த்தேன். இது கண்டனத்துக்குரியது. ஏற்கெனவே பிரணவ் சிங் மீது இது போன்ற புகார்கள் இருந்தது.

அதனால்தான் அவர் கட்சியிலிருந்து 3 மாதங்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டார். இந்த விவகாரம் குறித்து உத்தரகண்ட் மாநில பாஜக தலைவர்களுடன் பேசி விரைவில் கடுமையான நடவடிக்கை எடுப்போம் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+