நெஞ்சுவலியால் இறந்த மனைவி.. சிறிது நாளில் கொரோனாவுக்கு பாஜக எம்எல்ஏவும் பலி
ராஞ்சி: மனைவி உயிரிழந்த சில தினங்களில் உத்தரகண்ட் மாநில பாஜக எம்எல்ஏவும் கொரோனாவுக்கு பலியானதால் அப்பகுதியில் சோகம் நிலவுகிறது.
அல்மோரா மாவட்டம், சால்ட் தொகுதி எம்எல்ஏவான சுரேந்திர குமார் ஜீனாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு டெல்லியில் உள்ள சர் கங்காராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று இரவு அவரது உடல்நிலை மோசமடைந்தது. இதையடுத்து அவரை காப்பாற்ற டாக்டர்கள் தொடர்ந்து போராடினார்கள்.
அவரது உடல்நிலையை கண்காணித்து வந்த நிலையில் இன்று அதிகாலை அவரது உயிர் பிரிந்தது. இந்த தகவலை கட்சியின் மாநில துணைத் தலைவர் தெரிவித்தார். அவரது மறைவுக்கு மாநில பாஜக தலைவர், துணைத் தலைவர் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்தனர்.
ஜீனா மனைவி சமீபத்தில்தான் நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்திருந்தார். அவர் இறந்த சில தினங்களிலேயே எம்எல்ஏ ஜீனா கொரோனா காரணமாக உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக எம்எல்ஏவின் மறைவை அடுத்து மாநிலம் முழுவதும் தீபாவளி கொண்டாட்டத்தை ஆளும் பாஜக கட்சி கைவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications