பாஜக எம்.பி எனது மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்துள்ளார்: புகார் கொடுத்த தொழிலதிபர்

கர்நாடக மாநிலம் மங்களூர் மாவட்டத்தின் தட்சின கன்னடா தொகுதியின் எம்.பியாக பாஜகவின் நளின்குமார் கட்டீல் பதவி வகித்து வருகிறார். இவருக்கு எதிராக பந்தர் காவல் நிலையத்தில் சதீஷ் ஷெட்டி என்ற தொழிலதிபர் புகார் அளித்துள்ளார். புகார் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
பெங்களூரை சேர்ந்த நான், தற்போது மும்பையில் தொழில் செய்து வருகிறேன். எனக்கும், தட்சின கன்னட மாவட்டம் சிருவா பகுதியை சேர்ந்த வினோதா என்பவருக்கும் சிலஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. எங்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நான் பெங்களூரில் இருந்து மும்பைக்கு தொழில் செய்ய சென்றேன். ஆனால் எனது மனைவி என்னுடன் வர மறுத்துவிட்டார். இதனால் எனது மனைவி குழந்தைகளுடன் சிருவா பகுதியில் வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக எனது மனைவியில் நடவடிக்கையில் எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் நான், கடந்த வாரம் சிருவா பகுதிக்கு வந்தேன்.
அப்போது என் மனைவி வினோதா, யாரிடமோ நீண்ட நேரம் போனில் பேசி கொண்டிருந்தார். இதுபற்றி கேட்டால் தோழிகளுடனும், உறவினர்களுடன் பேசுகிறேன் என்று கூறி வந்தார். இந்த நிலையில் அவரது செல்போனை பார்த்தால், ஒரே எண்ணில் நீண்ட நேரம் பேசியுள்ளார். மேலும் அந்த எண், நளின்குமார் கட்டீல் எம்.பி. உடையது என்பது தெரியவந்தது. இதனால் அந்த எம்.பி., எனது மனைவியுடன் கள்ள தொடர்பு வைத்திருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து எனது மனைவியிடம் கேட்டால், சண்டைக்கு வருகிறார். என்னுடன் வாழ பிடிக்கவில்லை என்றும் கூறுகிறார். இதனால் நளின்குமார் கட்டீல், எனது மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்து எனது வாழ்க்கையை சீரழித்து விட்டார். என் மனைவியை என்னிடம் இருந்து பிரித்து விட்டார். இதனால் அந்த எம்.பி. மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அந்த எம்.பி.யிடம் இருந்து எனது மனைவியை மீட்டு தரவேண்டும். இவ்வாறு அந்த புகாரில் கூறப்பட்டு உள்ளது.
இதனிடையே புகாரை எம்.பி. நளின்குமார் கட்டீல் மறுத்துள்ளார். அவர் கூறுகையில், என் மீது புகார் கொடுத்த அவர் யார் என்றே எனக்கு தெரியாது. எனது நற்பெயரை கொடுக்க வேண்டும் என்று யாரோ வேண்டுமென்ற சதி செய்கிறார்கள். போலீசார் விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டு வரவேண்டும் என்றார். இதே தொகுதியில் இந்த தேர்தலிலும் பாஜக சார்பில் போட்டியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பூனைக்குட்டி வெளியே வந்துருச்சு! Don't care.. அண்ணாமலை பற்றி அமித் ஷா சொன்ன வார்த்தை! கலகல கமலாலயம்! -
அண்ணாமலையின் புதிய அரசியல் அத்தியாயம்! செப்டம்பர் 14ல் வெளியாகிறது கட்சிப் பெயர்? -
2026 போயே போச்சு.. அதான் 2031 இருக்கே! அமித் ஷா கையில் ’ஆபரேசன் தமிழ்நாடு’.. வங்கத்து கணக்கு எடுபடுமா? -
நயினார் நாகேந்திரனுக்கு.. கேரள ஆளுநர் பதவி! அள்ளிக்கொடுக்கும் பாஜக! அப்போ.. அண்ணாமலை ரூட் சரிதான்! -
ரஜினிகாந்த் உடன் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திடீர் மீட்டிங்.. போயஸ் கார்டனில் ஆலோசித்தது என்ன? -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை












Click it and Unblock the Notifications