பாஜக எம்.பி.சாக்ஷி மகாராஜூக்கு கொலை மிரட்டல் விடுத்த அல்கொய்தா தீவிரவாதிகள் !
டெல்லி: பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் உன்னாவ் தொகுதியின் எம்.பி.யும் ஆகிய சாக்ஷி மகாராஜ் தனக்கு அல்கொய்தா தீவிரவாத அமைப்பினர் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறியுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் மக்களவைத் தொகுதியில் இருந்து பாஜக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் சாக்ஷி மகாராஜ். இவர் சில மாதங்களுக்கு முன் கருத்து தெரிவிக்கையில், "பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி காலத்துக்குள் அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும்.

பாஜக ஆட்சியில் ராமர் கோயில் கட்டப்படாவிட்டால், காங்கிரஸ் ஆட்சியிலா கட்டப்படும். இல்லை முலாயம் சிங், மாயாவதி ராமர் கோயிலை கட்டுவார்களா?
ராமர் கோயில் எங்கிருந்ததோ அங்கு மீண்டும் எழுப்பப்படும். பாபர் மசூதியின் பெயரில் அங்கிருந்து ஒரு செங்கலைக் கூட யாரும் அசைக்க முடியாது. என சர்ச்சைக்குரிய வகையில் கருத்துத் தெரிவித்திருந்தார்.
மேலும், அயோத்தியில் ராமர் கோயில் ஒன்று இருந்தது. அந்த கோயில் வரும் காலத்தில் திரும்பவும் கட்டப்படும். இது கண்ணைக் கவரும் வகையில் இருக்கும். 2019-ம் ஆண்டுக்குள், அதாவது அடுத்த மக்களவை தேர்தலுக்கு முன் அயோத்தியில் பிரம்மாண்டமாக ராமர் கோயில் கட்டி முடிக்கப்படும்" எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில், டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சாக்ஷி மகராஜ் கூறுகையில், தனக்கு அல்கொய்தா தீவிரவாத அமைப்பினரிடம் இருந்து கொலை மிரட்டல் வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications