கதைகளை அவிழ்த்துவிடாதீர்கள்.. மோடியை நேரடியாக விமர்சிக்கும் பாஜக எம்.பி சத்ருகன் சின்ஹா!
Recommended Video

டெல்லி: மத்திய பாஜக அரசை தொடர்ந்து சீண்டிவரும் அக்கட்சி லோக்சபா எம்.பியும், நடிகருமான சத்ருகன் சின்ஹா இப்போது புது அம்பை ஏவியுள்ளார்.
மோடி தலைமையிலான பாஜக அரசின் பொருளாதார கொள்கைகளை தொடர்ந்து விமர்சனம் செய்து வருபவர்களில் ஒருவர் முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா, மற்றொருவர், சத்ருகன்சின்ஹா.
சின்ஹாக்கள் இருவருமே, மோடி அரசுக்கு சிம்ம சொப்பனமாக மாறிவிட்டனர்.
|
நம்ப முடியாத கதைகள்
இதோ மற்றொரு டிவிட்டை வெளியிட்டு விமர்சன கணையை வீசியுள்ளார் சத்ருகன் சின்ஹா. அதை பாருங்கள்.
மரியாதைக்குரிய ஐயா! தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, நம்ப முடியாத கதைகளை, அரசியல் எதிரிகளுக்கு எதிராக, தினமும் அவிழ்த்துவிட வேண்டுமா? இப்போது, பாகிஸ்தான் தூதர் மற்றும் ராணுவ ஜெனரல்களுடன் அவர்களை இணைத்து பேச வேண்டுமா?
|
ஆரோக்கிய அரசியலுக்கு அழைப்பு
ஐயா! புது புது ட்விஸ்டுகள், கதைகளை தவிர்த்துவிட்டு, நாம் சொன்ன வாக்குறுதிகளை முன்வைத்து பிரசாரம் செய்யலாம். வீட்டு வசதி, வளர்ச்சி, இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு, ஆரோக்கியம், குஜராத் வளர்ச்சி மாடல் ஆகியவை குறித்து பேசலாம். மதவாத சூழ்நிலையை தவிர்த்துவிட்டு ஆரோக்கியமான அரசியலுக்கும், ஆரோக்கியமான தேர்தலுக்கும் செல்லலாம். இவ்வாறு சத்ருகன் சின்ஹா தெரிவித்துள்ளார்.

சத்ருகன் சின்ஹா நீக்கம்?
சத்ருகன் சின்ஹாவின் டிவிட்டுகள் பலவும் நேரடியாக மோடியின் தேர்தல் வியூகத்தை எதிர்ப்பதை போலவே உள்ளன. இதனால் சத்ருகன் சின்ஹா மீது கோபத்தில் உள்ளதாம் பாஜக மேலிடம். குஜராத் தேர்தல் முடிவடைந்ததும், சத்ருகன் சின்ஹா பாஜகவிலிருந்து நீக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

எதிர்க்கட்சிகள்
குஜராத்தில் பிரதமர் மோடியின் தேர்தல் பிரசாரம், இந்துக்கள், ராகுல் காந்தி, மணிசங்கர் ஐயர் ஆகியோரை மையம் வைத்ததாக உள்ளது. வளர்ச்சி சார்ந்த வாசகங்களை பிரசாரத்தில் கேட்க முடியவில்லை என்பது எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முன்வைத்து வரும் குற்றச்சாட்டு ஆகும். அதைத்தான் சத்ருகன்சின்ஹா வெளிப்படுத்தியுள்ளார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications