Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாஜக அலுவலகத்தை அடித்து நொறுக்கிய மமதா ஆதரவாளர்கள் ... கொல்கத்தாவில் திடீர் பதற்றம்

Subscribe to Oneindia Tamil

கொல்கத்தா: தெற்கு கொல்கத்தா அருகே பவானிபூரில் உள்ள பாஜக அலுவலகத்தை மமதா ஆதரவாளர்கள் அடித்து நொறுக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமாரிடம் விசாரிக்க நேற்று சிபிஐ அதிகாரிகள் சென்றனர். அப்போது கொல்கத்தா போலீசாருக்கும், சிபிஐ அதிகாரிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

Bjp office in bhabanipur south kolkata has been vandalised

இதனையடுத்து மத்திய அரசை கடுமையாக விமர்சனம் செய்த மமதா பானர்ஜி சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டார். 2வது நாளாக அவர் போராட்டம் நீடித்துள்ளது. மமதாவின் போராட்டத்துக்கு பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் அவரின் பவானிபூர் தொகுதியில் உள்ள பாஜக அலுவலகத்துக்கு வந்த மமதா ஆதரவாளர்கள் உள்ளே இருந்த பொருட்களை எடுத்து வீசி. அந்த அறையை துவம்சம் செய்த அவர்கள், கட்டப்பட்டிருந்த கட்சி கொடிகளை கிழித்து வீசியுள்ளனர்.

இந்த சம்பவத்தின் போது அந்த அலுவலகத்தில் பாஜக தொண்டர்கள் யாரேனும் இருந்தார்களா என்பது குறித்த விவரங்கள் வெளியாகவில்லை. இருப்பினும்... இந்த விவகாரம் மேற்கு வங்க மாநிலத்தில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+