பிடிபி கூட்டணியை முறித்தது பாஜக.. கவிழ்ந்த காஷ்மீர் அரசு.. சட்டசபையில் பலம் இதுதான்
Recommended Video

டெல்லி: ஜம்மு காஷ்மீரில் பாஜக - மக்கள் ஜனநாயக கட்சி (பிடிபி) நடுவேயான கூட்டணி முறிந்துள்ளது. போர் நிறுத்தத்தை தொடருவதில் பாஜக, மஜக இடையே கருத்து வேறுபாடு காரணமாக கூட்டணி முறிந்துள்ளது.
ஜம்மு காஷ்மீரில் பாஜக மற்றும் மக்கள் ஜனநாயக கட்சியின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. பிடிபி கட்சியின் மெஹபூபா முப்தி முதல்வராக பதவி வகித்து வருகிறார்.

மொத்தம் 87 உறுப்பினர் கொண்ட சட்டசபையில், பாஜக பலம் 25 ஆகவும், பிடிபி பலம் 28 ஆகவும் உள்ளது. குறைந்தபட்ச பெரும்பான்மைக்கு தேவை 44 எம்எல்ஏக்களாகும்.
இந்த நிலையில், மெஹபூபா முப்தி அரசுக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுவதாக பாஜக பொறுப்பாளர் ராம்மாதவ் இன்று மதியம் நிருபர்கள் மத்தியில் அறிவித்தார். ஆட்சிக்கான ஆதரவை வாபஸ் பெற்றதற்கான கடிதத்தை மாநில ஆளுநருக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
காஷ்மீரில் ராணுவவீரர் அவுரங்கசீப் கடத்தி கொல்லப்பட்டது, பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறலுக்கு பதிலடி கொடுப்பது உள்ளிட்ட விவகாரங்களில் பாஜகவுக்கும், பிடிபி கட்சிக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள்தான் கூட்டணி முறிவுக்கு காரணம் என முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலிடம் ஆலோசனை நடத்திய சில மணி நேரங்களில் பாஜக தலைவர் அமித்ஷா இக்கூட்டணியை முறிக்க முடிவு செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாஜக ஆதரவை வாபஸ் பெற்றுள்ளதால் காஷ்மீரில் மெஹபூபா முப்தி அரசு கவிழும் சூழ்நிலை உருவாகியது. இதையடுத்து அவரே தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்து ஆளுநரிடம் கடிதம் அளித்துவிட்டார்.
-
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications