தமிழகம், பீகார் தேர்தலுக்காகவே மத்திய அமைச்சரவையில் மாற்றம்? செம்ம எதிர்பார்ப்பில் தமிழக 'தலைகள்'
டெல்லி: தமிழ்நாடு, பீகார் உள்ளிட்ட மாநிலங்களின் சட்டசபை தேர்தல்களுக்கு முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படலாம் என்றும் சட்டசபை தேர்தல்களை எதிர்கொண்டிருக்கும் மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு மத்திய அமைச்சரவையில் இடம் கிடைக்கக் கூடும் என்றும் டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
பீகார் மாநில சட்டசபைக்கு இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெற உள்ளது. 2026-ம் ஆண்டு தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அஸ்ஸாம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களின் சட்டசபை தேர்தல்கள் நடைபெற உள்ளன. பீகார் மற்றும் 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தல்களுக்கான பணிகளில் அனைத்து அரசியல் கட்சிகளும் முழு வீச்சில் இறங்கிவிட்டன.

பீகாரில் நிதிஷ்குமாரின் ஜேடியூ தலைமையில்தான் பாஜக தேர்தலை எதிர்கொள்ள இருக்கிறது; பீகாரில் ஆர்ஜேடி- காங்கிரஸ் இணைந்து தேர்தலை சந்திக்க இருக்கின்றன. தமிழ்நாட்டில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக இடம் பெற உள்ளது. மேற்கு வங்கத்தில் எப்படியாவது ஆட்சியை கைப்பற்ற முடியுமா? என போராடுகிறது பாஜக. ஆனால் பாஜகவிடம் ஆட்சியை பறிகொடுத்துவிடக் கூடாது என்கிற பரிதவிப்பில் களத்தில் நிற்கிறது திரிணாமுல் காங்கிரஸ். கேரளாவில் இடதுசாரிகள் ஆட்சி மீது பெரும் அதிருப்தி நிலவுவதால் காங்கிரஸ் கட்சி முழு நம்பிக்கையில் இருக்கிறது.
இந்த பின்னணியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படலாம் எனவும் கூறப்படுகிறது. இந்த ஆண்டும் அடுத்த ஆண்டும் சட்டசபை தேர்தல் நடைபெறும் மாநிலங்களை கவனத்தில் கொண்டு மத்திய அமைச்சரவை மாற்றம் செய்யப்படலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாட்டில் பாஜக தலைமையிலான கூட்டணியில் பாமக, தமாகா ஆகியவை தொடர்ந்து இடம் பெற்றுள்ளன. இந்த இரு கட்சிகளுமே மத்தியில் அமைச்சர் பதவிகளை எதிர்பார்த்து பல ஆண்டுகளாக காத்திருக்கின்றன. தற்போது பாஜக கூட்டணியில் அதிமுகவும் இணைகிறது. அதிமுகவுக்கு லோக்சபாவில் எம்பிக்கள் இல்லை என்ற போதும் ராஜ்யசபாவில் எம்பிக்கள் இருக்கின்றனர். இதனால் அதிமுகவும் மத்திய அமைச்சர் பதவியை எதிர்பார்க்கிறது. அதிமுகவில் மூத்த தலைவர் தம்பிதுரையின் பதவி காலம் முடிவடைவதால் சிவி சண்முகத்துக்கு மத்திய அமைச்சராகும் வாய்ப்புள்ளது. அத்துடன் அதிமுக கூட்டணிக்காக தமிழ்நாடு பாஜக தலைவர் பதவியை இழக்க தயாராகும் அண்ணாமலைக்கும் கூட மத்திய அமைச்சரவையில் இடம் கிடைத்தாலும் ஆச்சரியமில்லை என்றே கூறப்படுகிறது. இதனால் பாஜக கூட்டணியில் உள்ள தமிழக அரசியல் கட்சிகள் பெரும் எதிர்பார்ப்புடன் இருக்கின்றன
-
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
விஜய் வந்தும் வேலைக்கு ஆகல! சர்ச்சையை கிளப்பும் சட்டம் ஒழுங்கு.. டிஜிபி அதிரடி உத்தரவு! -
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
Real Estate: தமிழகத்தில் கட்டுமான பொருட்களின் விலை கிடுகிடு உயர்வு! வீடு கட்டுவோர் கவலை! -
அண்ணாமலையின் ஸ்கெட்ச்.. பாஜகவுக்கு இல்லை! அதிமுகவுக்குதான்! எடப்பாடி பழனிசாமி ஷாக்! -
ரூ. 20,000 கோடி 'ஸ்மார்ட் மீட்டர்' திட்டத்திற்கு மூடுவிழாவா? அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம் -
பத்திரப்பதிவு செய்ய இனி சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டாம்! தமிழக அரசு அதிரடி! -
செந்தில் பாலாஜி கைதாகிறாரா? தவெக கடிதத்திற்கு ஓகே சொன்ன ஆளுநர்! மறுபடியும் முதல்ல இருந்தா? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கமல், கார்த்திக் கூடதான் கட்சி ஆரம்பிச்சாங்க! என்னாச்சு? அண்ணாமலைலாம் ஒரு ஆளே இல்லை! முஸ்தபா விமர்சனம் -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்!












Click it and Unblock the Notifications