பாஜகவில் ப்ப்ப்ப்ப்ப்ப்பா பகல் கனவு.. 37% வாக்குகளுக்கு குறியாம்- எடப்பாடி ஆட்சி கிரேட் எஸ்கேப்!
தமிழகத்தில் லோக்சபா தேர்தல் பணிகளுக்கு பிள்ளையார் சுழிபோட்டுவிட்டது பாஜக. இதன் தொடக்கம்தான் படாதபாடு படும் தமிழக அரசியல்.
டெல்லி: உத்தரப்பிரதேச தேர்தல் முடிந்த கையோடு தமிழக அரசியலை ஆட்டிப் படைக்கவும் லோக்சபா தேர்தலுக்கு வியூக்கவும் முனைப்புடன் களமிறங்கியுள்ளது பாஜக. அந்த கட்சியைப் பொறுத்தவரையில் 2019 தேர்தலில் 37% வாக்குகளுக்கு இலக்கு வைத்துள்ளது என்கின்றன டெல்லி வட்டாரங்கள்.
பாஜகவின் புதிய கொள்கை முழக்கம் 'கழகங்கள் இல்லாத தமிழகம்'. அதுவும் ஜெயலலிதா மறைந்தபின்னர் அதிமுகவை சுக்கு நூறாக சிதைத்துக் கொண்டிருக்கிறது பாஜக.
தற்போதைய நிலையில் சசிகலா, ஓபிஎஸ், தீபா என 3 கோஷ்டிகள் அதிமுகவில் உள்ளன. சசிகலாவை தொடக்கம் முதலே எதிர்த்தாலும் ஓபிஎஸ் அணியில் இணைவதற்கு விரும்பிய சசிகலா புஷ்பாவை பாஜக தடுத்து வைத்திருக்கிறது.

கட்டுப்பாட்டை மீற கூடாது
பாஜகவைப் பொறுத்தவரையில் அதிமுகவின் எந்த ஒரு கோஷ்டியும் தங்களது கட்டுப்பாட்டை மீறிவிடக் கூடாது என்பதில் முனைப்புடன் உள்ளது. இதன் முதல்கட்டமாகத்தான் சசிகலாவுக்கு எதிர்ப்பு; 2-வது கட்டமாக தினகரனுக்கு செக் வைத்திருக்கிறது.

37% வாக்குகள்
சசிகலா, தினகரனை ஓரம்கட்டி ஒதுக்கிவைத்துவிட்டால் அதிமுகவின் அத்தனை கோஷ்டிகளும் தங்களது பிடியில் வந்துவிடும் என்பது பாஜகவின் கணக்கு. அத்துடன் இந்துத்துவா அமைப்புகளின் அட்வைசர்களின் ஒருவராக கருதப்படும் அந்த ஆடிட்டர்தான் 37% வாக்குகளை எளிதாக பெற முடியும் என ஸ்கெட்ச் போட்டு கொடுத்திருக்கிறார்.

பிராமணர், நாடார் வாக்குகள்
எப்போதுமே ஜெயலலிதாவுக்கு ஆதரவான பிராமணர் வாக்குகள் 2.5% அப்படியே பாஜகவுக்கு வந்துவிடுமாம்... சசிகலா புஷ்பா உள்ளிட்டோரை வைத்து நாடார் சமூகத்தின் 8% வாக்குகளை வளைப்பது அடுத்த ப்ளான்.

தலித்துகள், கவுண்டர் வாக்குகள்
அதிமுக, திமுக ஆகிய கழகங்களால் தலித் சமூகம் முன்னேறவே இல்லை என பொய்யை அவிழ்த்துவிட்டு 20% வாக்குகளுக்கு குறி வைக்கிறதாம் பாஜக. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சியை தொந்தரவு செய்யாமல் இருந்தாலே கவுண்டர் சமூகத்தின் வாக்குகளை கொத்தாக அள்ள முடியும்.

மொத்தம் 37% வாக்குகள்
இப்படி கூட்டல் கழித்தல் போட்டு மொத்தம் 37% வாக்குகளை பாஜகவால் அள்ளிவிட முடியும் என கூறியிருக்கிறார் அட்வைசர் ஆடிட்டர். இதற்கேற்பவே மத்தியில் ஆட்சியில் இருக்கும் கோதாவில் ஒட்டுமொத்த தமிழக அரசியலை தங்களது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு விளையாட்டுக் காட்டுகிறதாம் பாஜக.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications