கோவா: முதுகில் குத்திய பாஜக கூட்டணிக்கு குட்பை சொன்னது கோவா பார்வர்டு கட்சி- காங்.உடன் கை கோர்ப்பு!
பனாஜி: கோவாவில் தங்களது முதுகில் குத்திய பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு குட்பை சொல்லிவிட்டு காங்கிரஸ் தலைமையிலான மெகா கூட்டணியில் இணைந்துள்ளது கோவா பார்வர்டு கட்சி.
கோவாவில் 2017-ல் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. 40 இடங்களைக் கொண்ட கோவா தேர்தலில் காங்கிரஸ் 16; பாஜக 14 இடங்களில் வென்றன. இதர இடங்களை கோவா மாநில கட்சிகள் பெற்றன.
தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் காங்கிரஸ் ஆட்சி அமைத்திருக்க வேண்டும். ஆனால் பாஜக, மாநில கட்சிகள் உதவியுடன் திடீரென ஆட்சி அமைத்தது பெரும் சர்ச்சையானது.

தாராளம் காட்டிய பாஜக
அப்போது பாஜக அரசுக்கு கோவா பார்வர்டு கட்சி ஆதரவும் தந்தது. இதனால் அந்த கட்சியின் தலைவர் விஜய் சர்தேசாய் துணை முதல்வராகவும் 3 பேர் அமைச்சர்களாகவும் இருந்தனர். முதல்வராக இருந்த மனோக்கர் பாரிக்கர் மறைவுக்குப் பின்னர் கோவாவில் அரசியல் சூழல்கள் மாறின.

வெளியே தள்ளிவிட்ட பாஜக
ஒருகட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் 10 எம்.எல்.ஏக்கள் கூண்டோடு காங்கிரஸில் இணைந்தனர். இதனால் பாஜகவுக்கு தேவையான பெரும்பான்மை சட்டசபையில் கிடைத்தது. இதனால் அதுவரை ஆட்சிக்கு ஆதரவு தந்த கோவா பார்வர்டு கட்சியை அரசாங்கத்தில் இருந்து வெளியேற்றியது. துணை முதல்வர், அமைச்சர்கள் என அந்த கட்சியை சேர்ந்த அத்தனை பேரின் பதவியும் பறிக்கப்பட்டது.

பாஜகவுக்கு குட்பை
இதனால் கோவா பார்வர்டு கட்சி நொறுங்கிப் போனது. இந்த நிலையில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு விஜய் சர்தேசாய் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், முதல்வர் பிரமோத் சாவந்த் தலைமையிலான அரசில் ஊழல் மலிந்து கிடக்கிறது. தற்போதைய பாஜக அரசு கோவா மக்கள் நலனுக்கு, பண்பாட்டுக்கு எதிரானது விமர்சித்திருக்கிறார்.

காங். கூட்டணியில் ஐக்கியம்
மேலும் பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் தலைமையில் மெகா கூட்டணி உருவாகி வருகிறது. கோவாவில் 2022-ல் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது அஸ்ஸாம் தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணியில் இருந்து கட்சிகள் விலகி காங்கிரஸ் அணியை பலப்படுத்தின. இது பாஜகவுக்கு சவாலாக இருந்தது. இதேபோல்தான் கோவாவிலும் ஒரு இக்கட்டான நிலையை எதிர்கொள்ள போகிறது பாஜக.
-
ரஜினிகாந்த் மருமகன் விசாகன்.. அண்ணாமலையின் ‘வி தி லீடர்ஸ்’ இயக்கத்தில் இணையப் போகிறார்? ட்விஸ்ட் -
22 எம்பிக்கள் உள்ள திமுக ஏன் பாஜகவை நோக்கி போகணும்? டெல்லி லாபிக்கு பிரபலம் கொடுத்த நச்சுப் பதிலடி -
அண்ணாமலைக்கும் - விஜய்க்கும் இடையேதான் போட்டி.. உடைத்து பேசிய அமர் பிரசாத் ரெட்டி! -
ஒரு மணி நேரம் நடந்த மீட்டிங்.. ரஜினிகாந்த் மருமகனுக்கு மிகப்பெரிய பொறுப்பை கொடுக்கும் அண்ணாமலை! -
பாஜகவும் திமுகவும் ஒன்னு.. டெல்லிக்கு அதிர்ச்சி கொடுத்த அமர் பிரசாத் ரெட்டி! அண்ணாமலையுடன் ஐக்கியம் -
திராவிட அரசியலை உடைத்த தவெக.. விஜய் வெற்றியால் டென்ஷனான பாஜக? சாணக்கிய அமித்ஷா அடுத்த பிளான் இதுதானா -
அமைதியோ அமைதி.. பிள்ளையைக் கிள்ளி விட்ட அண்ணாமலை! அரசியல் கட்சி அறிவிப்பு எப்போது? திடீர் ட்விஸ்ட்! -
பாஜக பல்ஸ் குறையுது.. கமலாலய செங்கல்லை ஒவ்வொன்றாக உருவும் அண்ணாமலை! பாஜக பி-டீமா வி தி லீடர்ஸ்? -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
அமித்ஷா டெல்லி திரும்பியதுமே மாறிய கணக்கு.. புதுச்சேரி ரங்கசாமிக்கு க்ரீன் சிக்னல்.. யாரந்த 3 பேர் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய்












Click it and Unblock the Notifications