டெல்லி தேர்தல்: 1998-ஐ போன்றே 2015ம் ஆண்டிலும் மண்ணை கவ்விய பாஜக
டெல்லி: டெல்லி தேர்தல் முடிவுகள் வரலாற்றில் ஏற்கனவே நடந்தது மறுபடியும் நடப்பதை காண்பிக்கிறது. லோக்சபா தேர்தல் நடந்து 9 மாதங்களில் ஆம் ஆத்மி கட்சி டெல்லி சட்டசபை தேர்தலில் அமோக வெற்றி பெற்றுள்ளது.
மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த 9 மாதங்களில் அதற்கு கிடைத்துள்ள படுதோல்வி ஆகும். இதற்கு ஏதாவது காரணங்கள் உள்ளதா என்றால் ஆமாம், மூன்று முக்கிய காரணங்கள் உள்ளது என்பது தான் பதில்.
அதீத நம்பிக்கை தான் பாஜக தோல்வி அடைந்ததற்கு முதல் காரணம் ஆகும். கடந்த 2013ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இருந்து நடந்த லோக் சபா தேர்தல் உள்ளிட்ட அனைத்து தேர்தல்களிலும் பாஜக வெற்றி பெற்றது. அந்த தைரியத்தில் தான் டெல்லி தேர்தலையும் அணுகியது.

பாஜகவின் தோல்வி
2013ம் ஆண்டு தேர்தலில் பெரும்பான்மையை பெற்ற பிறகு, பொது தேர்தலில் அனைத்து இடங்களில் வெற்றி பெற்ற பிறகும் டெல்லி தேர்தலுக்கு ஏன் இத்தனை நாட்களாக பாஜக காத்திருந்தது என்று தெரியவில்லை. இந்த கால அவகாசத்தை தான் கெஜ்ரிவால் சரியாக பயன்படுத்திக் கொண்டார். 1998ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வாஜ்பாயி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 254 இடங்களில் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சிக்கு வந்தது.
டெல்லியில் மொத்தம் உள்ள 7 நாடாளுமன்ற தொகுதிகளில் ஆறிலும், 70 சட்டசபை தொகுதிகளில் 52 இடங்களிலும் பாஜக வெற்றி பெற்றது. அப்போது டெல்லியில் பாஜக பதவியில் இருந்தது. மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே கட்சி ஆட்சியில் இருந்தும் அடுத்த ஆண்டு நடந்த மாநில தேர்தலில் அதன் வாக்கு சதவிகிதம் குறைந்தது. லோக்சபா தேர்தலுடன் ஒப்பிடுகையில் மாநில தேர்தலில் பாஜகவின் வாக்கு சதவிகிதம் வெகுவாக குறைந்தது.

உட்கட்சி பூசல்
பாஜகவின் தோல்விக்கு இரண்டாவது காரணம் உட்கட்சி பூசல். 1998ம் ஆண்டிலும் சரி தற்போது நடந்த தேர்தலிலும் சரி உட்கட்சி பூசல் தான் தோல்விக்கு வழிவகுத்துள்ளது.
1998ம் ஆண்டு வெளியேறிய முதல்வர் சுஷ்மா ஸ்வராஜ் கூறுகையில், தேர்தலில் தங்கள் கட்சி தோல்வி அடைய எதிர்கட்சிகள் அல்ல மாறாக உட்கட்சி பூசல் தான் காரணம் என்றார். அவர் பாஜக தலைவர்கள் மதன் லால் குரானா மற்றும் சாஹிப் சிங் வர்மா(இருவருமே முன்னாள் முதல்வர்கள்) ஆகியோருக்கு இடையேயான பிரச்சனையை பற்றி தான் மறைமுகமாகத் தெரிவித்தார்.

சுஷ்மா
கிரண் பேடியை போன்று சுஷ்மாவும் உட்கட்சி பூசலால் பாதிக்கப்பட்டவர். தற்போது எப்படி பல பிரச்சனையில் இருந்த பாஜக கிரண் பேடியை முதல்வர் வேட்பாளர் ஆக்கியதோ அதே போன்று தான் 1998ம் ஆண்டு சுஷ்மா ஸ்வராஜ் தேர்தலுக்கு முன்பு முதல்வராக்கப்பட்டார்.

பிரச்சனைகள்
பாஜக தோல்வி அடைய மூன்றாவது காரணம் பல பிரச்சனைகள். சுஷ்மா அரசு 1998ம் ஆண்டு தேர்தலில் தோல்வி அடையக் காரணம் வெங்காயம் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு தான். தற்போது பெட்ரோல் விலை குறைக்கப்பட்டும் அது பாஜகவுக்கு கை கொடுக்கவில்லை.

பேடி
கெஜ்ரிவால் தனது இமேஜை அழகாக சரி செய்து கொண்டார். அது பாஜக தலைவர்களால் முடியவில்லை. கிரண் பேடி பாஜகவில் சேர்ந்தது அவருக்கும், கட்சிக்கும் தற்கொலை முயற்சி ஆகும். மோடி கெஜ்ரிவாலை தாக்கிப் பேசியதும் அவருக்கு கை கொடுக்கவில்லை. பாஜக மக்களின் நம்பிக்கையோடு சேர்த்து டெல்லியையும் இழந்துள்ளது.












Click it and Unblock the Notifications