ஆபரேஷன் லோட்டஸ், லவ் ஜிஹாத், லேண்ட் ஜிஹாத்..ஜார்க்கண்ட் ஆட்சியை பிடிக்க பாஜகவின் திரிசூல வியூகம்!
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்படாத நிலையிலும் அம்மாநிலத்தில் ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக பாஜக மும்முரமான வியூகங்களை செயல்படுத்தி வருகிறது. ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா(ஜேஎம்எம்) - காங்கிரஸ் கூட்டணியை உடைப்பது, வங்கதேச முஸ்லிம்கள் ஊடுருவலை முன்வைத்து லவ் ஜிஹாத், லேண்ட் ஹிஹாத் ஆகிய முழக்கங்கள் மூலம் பழங்குடிகள் வாக்குகளை சிதறடிக்கச் செய்வது என்கிற திரிசூல வியூகத்துடன் பாஜக களமிறங்கி இருக்கிறது.
ஜார்க்கண்ட் மாநில சட்டசபையில் மொத்தம் 81 இடங்கள் உள்ளன. இம்மாநிலத்தில் பெரும்பான்மைக்கு தேவை 41 இடங்கள்.

2019-ம் ஆண்டு ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தலில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 30 இடங்களையும் காங்கிரஸ் 16 இடங்களையும் ராஷ்டிரிய ஜனதா தளம் 1 இடத்தையும் கைப்பற்றி ஆட்சி அமைத்தது. பாஜக 25, ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா (பி) 3, அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் ஒன்றியம் 2, சிபிஐ (எம்எல்) லிபரேசன் 1, தேசியவாத காங்கிரஸ் 1, சுயேட்சைகள் 2 இடங்களில் வென்றன.
நிலையற்ற அரசியல்: 2000-ம் ஆண்டு பீகாரில் இருந்து aஜார்க்கண்ட் மாநிலம் உருவான பின்னர் 2005-ம் ஆண்டு முதலாவது சட்டசபை தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலில் பாஜக 30; ஜேடியூ 6 என தேசிய ஜனநாயகக் கூட்டணி 36 இடங்களைக் கைப்பற்றியது. காங்கிரஸ்- ஜேஎம்எம் கூட்டணியில் காங்கிரஸ் 17, ஜேஎம்எம் 9 இடங்களை வென்றன. ராஷ்டிரிய ஜனதா தளம் 7 இடங்களையும் கைப்பற்றியிருந்தது. அப்போது 10 நாட்கள் மட்டுமே ஜேஎம்எம் தலைவர் சிபுசோரன் முதல்வராக இருந்தார். அன்று முதல் 2014-ம் ஆண்டு வரை ஜார்க்கண்ட் மாநிலத்தில் எந்த ஒரு முதல்வரும் 5 ஆண்டுகள் பதவியில் இருந்தது இல்லை. சிபுசோரன், அர்ஜூன் முண்டா, மது கோடா, மீண்டும் சிபு சோரன், ஜனாதிபதி ஆட்சி, மீண்டும் சிபுசோரன், மீண்டும் ஜனாதிபதி ஆட்சி, மீண்டும் அர்ஜூன் முண்டா, மீண்டும் ஜனாதிபதி ஆட்சி, ஹேமந்த் சோரன் என அரசியல் நிலையற்ற மாநிலமாகவே ஜார்க்கண்ட் இருந்து வந்தது.
5 ஆண்டுகள் பதவி வகித்த ஒரே முதல்வர்: 2014-ம் ஆண்டு சட்டசபை தேர்தலிலும் கூட எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மைக்கான 41 இடங்கள் கிடைக்கவில்லை. பாஜக 37, ஜேஎம்எம் 19 இடங்களில் வென்றிருந்தன. இந்த தேர்தலுக்குப் பின்னர் பாஜகவின் ரகுபர்தாஸ் மட்டும்தான் முதல்வராக 5 ஆண்டுகள் பதவியில் இருந்தார்.
மாறிய முதல்வர்கள்: 2019-ம் ஆண்டு தேர்தலில் ஜேஎம்எம் காங்கிரஸ் கூட்டணி வென்ற போதும் அமலாக்கத்துறையால் முதல்வர் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டார். இதனால் சம்பாய் சோரன் முதல்வரானார். சிறையில் இருந்து வெளியே வந்த ஹேமந்த் சோரன் மீண்டும் முதல்வரானார். இதில் அதிருப்தி அடைந்த சம்பாய் சோரன், பாஜகவுக்கு தாவிவிட்டார்.
ஜேஎம்எம் - காங்கிரஸ் கூட்டணி: இந்த பின்னணியில்தான் ஜார்க்கண்ட் மாநில
சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலிலும் ஜேஎம்எம்- காங்கிரஸ்- ஆர்ஜேடி கூட்டணி நீடிக்கிறது. இடதுசாரிகளும் இந்த கூட்டணியில் இணைய இருக்கின்றன. ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆட்சியைத் தக்க வைக்க காங்கிரஸை உள்ளடக்கிய இந்தியா கூட்டணி போராடுகிறது. ஆட்சியைக் கைப்பற்ற பாஜக பல்வேறு வியூகங்களுடன் களமிறங்கி இருக்கிறது.
ஆபரேஷன் லோட்டஸ்: பாஜகவைப் பொறுத்தவரையில் திரிசூல வியூகத்தை கையில் எடுத்திருக்கிறது. ஜேஎம்எம்- காங்கிரஸ் கூட்டணியை உடைத்து அதன் தலைவர்களை வளைத்துப் போடும் ஆபரேஷன் லோட்டஸை பிரதானமாக நம்புகிறது பாஜக. இதன் முதல் விக்கெட்டாக சம்பாய் சோரனை வளைத்தது.
லவ் ஜிஹாத், லேண்ட் ஜிஹாத்: அதேபோல லவ் ஜிஹாத், லேண்ட் ஜிஹாத் என்கிற முழக்கங்களை முன்வைக்கிறது. வங்கதேச முஸ்லிம்கள், மேற்கு வங்கம் வழியாக ஜார்க்கண்ட் மாநிலத்துக்குள் ஊடுருவ அனுமதிக்கப்படுகின்றனர்; வங்கதேச முஸ்லிம்கள் லவ் ஜிஹாத் மூலமாக ஜார்க்கண்ட் பழங்குடி பெண்களை திருமணம் செய்கின்றனர்; வங்கதேச முஸ்லிம்கள் இத்தகைய திருமணங்கள் மூலமாக பழங்குடிகளின் நிலத்தை கைப்பற்றுகின்றனர் என்கிற லேண்ட் ஜிஹாத்தையும் பாஜக பிரசாரம் செய்து வருகிறது. ஜேஎம்எம்- காங்கிரஸ் கூட்டணிக்கு பக்க பலமாக இருப்பதே பழங்குடி வாக்குகள். அந்த வாக்குகளை சிதறடிக்கவே இந்த லவ் ஜிஹாத், லேண்ட் ஜிஹாத் பிரசாரத்தை பாஜக தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications