ராகுலை பாராட்டிவிட்டு பலே பல்டியடித்த 'பங்காளி' வருண்
டெல்லி: காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தமது அமேதி தொகுதியில் சிறப்பாக செயல்பட்டிருப்பதாக பாஜக வேட்பாளரும் ராகுலின் சித்தப்பா மகனுமாகிய வருண் காந்தி பாராட்டியிருந்தார். ஆனால் திடீரென தாம் எந்த ஒரு கட்சி வேட்பாளரையும் குறிப்பிட்டுப் பாரட்டவில்லை என்றும் வருண் காந்தி பல்டியும் அடித்துள்ளார்.
லோக்சபா தேர்தலில் இந்திரா குடும்பத்தைச் சேர்ந்த ராகுல் அமேதி தொகுதியில் போட்டியிடுகிறார். இந்திராவின் இளைய மகன் மறைந்த சஞ்சய் காந்தியின் மகன் வருண் காந்தி உ.பி.யின் சுல்தான்பூர் தொகுதியிலும் அவரது தாய் மேனகா காந்தி பிலிபத் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில், "ராகுல் காந்தி தமது அமேதி தொகுதியில் குறுந்தொழிற்சாலைகளை உருவாக்கியிருக்கிறார். அதுதான் நமக்கு இப்போது அவசியமானது." என்று வருண் காந்தி கூறியதாக செய்திகள் வெளியாகின.
இதற்கு ராகுல் காந்தியும் கூட பதிலளித்திருந்தார். "அமேதியில் நான் செயல்படுத்திய திட்டங்களை மற்றவர்கள் பாராட்டுவது மகிழ்ச்சியாக இருக்கிறது" என்று கூறியிருந்தார் ராகுல். ஆனால் பாஜக வேட்பாளராக இருந்து கொண்டு ராகுலை எப்படி வருண் புகழலாம் என்ற சர்ச்சை பாஜகவில் எழுந்தது.
இதனால் ஒரே போடாக வருண் காந்தி பல்டி அடித்துவிட்டார். "என்.ஜி.ஓக்கள் மற்றும் ஆசிரியர்களுடனான கூட்டத்தில் அமேதி தொகுதி சுய உதவிக் குழுக்கள் செயல்பாடுகள் பற்றி குறிப்பிட்டேன். அப்படி சொல்வதாலேயே எந்த ஒரு கட்சியையும் அல்லது வேட்பாளரையும் அங்கீகரித்து பாராட்டுவதாகிவிடாது" என ட்விட்டரில் திடீர் விளக்கம் கொடுத்திருக்கிறார் ராகுலின் பங்காளி வருண்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications