ராகுல்காந்தியின் நடத்தையால் ஷாக்காம்... சொல்றது யாருன்னு பாருங்க மக்களே!

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: ராகுல்காந்தி சீன தூதரை சந்திதிருப்பது அதிர்ச்சியளிப்பதாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி தெரிவித்துள்ளார். சந்திப்பது பிரச்சனையல்ல என்ற அவர் அதனை இல்லை என ராகுல்காந்தி மறுத்து பொய்க்கூறியிருப்பதாக கூறினார்.

அடிக்கடி சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவிப்பதையும் தமிழர்களை பொர்க்கிஸ் என்று கூறுவதையுமே வாடிக்கையாக வைத்திருக்கும் சுப்பிரமணிய சாமி ராகுல் காந்தி சீன தூதரை சந்தித்தது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

BJP senior leader Subramaniya swamy said that Rahul gandhi's behaving is shocking

தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு இதுதொடர்பாக நேர்க்காணல் அளித்த அவர், யார் யாரை சந்திப்பது என்பது பிரச்சனையல்ல என்றார். ஆனால் அதனை இல்லை என பொய் சொல்வதும் மறைப்பதும் தான் அதிர்ச்சியளிக்கிறது என்றார்.

Rahul Gandhi Copied Vijayakanth

ராகுல் காந்தி சீனத்தூதரை ரகசியமாக சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது இதன்மூலம் தெரியவந்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். சீனத் தூதரை சந்திக்கவில்லை என ராகுல் கூறுவது அவரது அதிர்ச்சியளிக்கும் நடத்தையை காட்டுவதாகவும் சுப்பிரமணிய சாமி கூறினார்.

ராகுல்காந்தி சீனத் தூதரை நேற்று ரகசியமாக சந்தித்ததாக தகவல் வெளியானது. இருநாடுகளுக்கும் இடையே எல்லைப் பிரச்சனை நீடிக்கும் நிலையில் ராகுல் காந்தியின் இந்த சந்திப்பு பரபரப்பை ஏற்படுத்தியது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
BJP senior leader Subramaniya swamy said that Rahul gandhi's behaving is shocking. He met Chinese envoy but he tried to hide it said Subramaniya swamy.
Please Wait while comments are loading...