பாஜகவிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட கீர்த்தி ஆசாத்துக்கு சு. சுவாமி பகிரங்க ஆதரவு
டெல்லி: கீர்த்தி ஆசாத் போன்ற நேர்மையானவரை கட்சி இழந்துவிடக்கூடாது என்பதால் அவருக்கு பதில் நோட்டீஸ் அனுப்ப உதவி செய்வதாகவும், கீர்த்தி ஆசாத் இன்னும் பாஜகவில்தான் தொடருகிறார் என்பதால், அவருக்கு உதவி செய்வதில் தப்பில்லை என்றும் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
டெல்லி கிரிக்கெட் சங்க தலைவராக மத்திய அமைச்சர், ஜேட்லி பதவி வகித்தபோது, பெரோஷா கோட்லா கிரிக்கெட் மைதான புனரமைப்புக்கு ரூ.24 கோடி மதிப்பிடப்பிடப்பட்டு, ரூ.114 கோடி செலவிடப்பட்டுள்ளது. ஆனால் இதுதொடர்பாக ஒப்பந்தப்புள்ளியில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

ஒரு லேப்டாப்புக்கு ரூ.36 ஆயிரம் ஒரு நாள் வாடகையாக வழங்கப்பட்டுள்ளது. ஒரு பிரின்டருக்கு தினமும் ரூ.3,000க்கு வாடகை அளிக்கப்பட்டுள்ளது. அதில் பணி செய்ததாக காட்டப்பட்ட 14 நிறுவனங்கள் போலியானவை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
எனவே, கிரிக்கெட் சங்க ஊழலில் மத்திய அமைச்சர் ஜேட்லிக்கு தொடர்பிருப்பதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டினார். சிபிஐ தனது அலுவலகத்தில் சோதனை நடத்தியதற்கு பதிலடியாக கெஜ்ரிவால் இக்குற்றச்சாட்டை முன்வைத்தார். இந்நிலையில், கெஜ்ரிவாலுக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார் ஜேட்லி.
இதுகுறித்து டிவிட்டரில் பாஜக எம்.பி கீர்த்தி ஆசாத் கூறிய கருத்து ஒன்று ஜேட்லியை சாடுவதாக இருந்தது. அந்த டிவிட்டரில், ஜேட்லி டிவிட்டர் அக்கவுண்டையும் டேக் செய்து, அவரை ஆண்மையற்றவர் என்று கீர்த்தியின் டிவிட் சாடியிருந்தது.
இதையடுத்து பாஜகவில் இருந்து அவர் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக நேற்று அக்கட்சி அறிவித்தது. அவரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த நோட்டீசை தயாரிக்கும் பணியில் பாஜகவை சேர்ந்த சுப்பிரமணியன் சுவாமி, கீர்த்தி ஆசாத்திற்கு உதவி செய்துவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதை உறுதி செய்து இன்று பேட்டியளித்த கீர்த்தி ஆசாத், பாஜகவுக்கு பதில் நோட்டீஸ் அனுப்பும் விஷயத்தில் எனக்கு உதவி புரிவதாக பாஜக தலைவர் சுப்ரமணிய சுவாமி கூறியுள்ளார் என்று தெரிவித்துள்ளார்.
கீர்த்தி ஆசாத் போன்ற நேர்மையானவரை கட்சி இழந்துவிடக்கூடாது என்பதால் அவருக்கு உதவி செய்வதாகவும், கீர்த்தி ஆசாத் இன்னும் பாஜகவில்தான் தொடருகிறார் என்பதால், அவருக்கு உதவி செய்வதில் தப்பில்லை என்றும் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications