ஜார்க்கண்ட் தேர்தல்: பாஜகவுக்கு காத்திருக்கும் நெருக்கடி.. பழங்குடியினர் வாக்குகளை அள்ளுமா?

Subscribe to Oneindia Tamil

ராஞ்சி: ஜார்க்கண்ட்டில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் பாஜகவுக்கு பழங்குடி மக்களின் வாக்குகளை திரட்டுவதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.

சமீப நாட்காளாக ஜார்க்கண்ட் தொடர்பான செய்திகள், தேசிய அளவில் பெரும் கவனம் பெற்றிருந்தன. அம்மாநில முதலமைச்சராக இருந்த ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டதிலிருந்து, அரசியல் பரபரப்பு நிலவி வருகிறது. ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்ட பின்னர், தற்காலிக முதலமைச்சராக சம்பாய் சோரன் நியமிக்கப்பட்டிருந்தார். ஆனால், ஹேமந்த் சிறையிலிருந்து வெளியே வந்த பின்னர், அவர் மீண்டும் முதலமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார்.

jharkhand assembly election 2024 bjp

இதில் அதிருப்பதியடைந்த சம்பாய் சோரன், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவிலிருந்து விலகி, பாஜகவில் ஐக்கியமானார். நடப்பாண்டு இறுதியில் இம்மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த கட்சி தாவல் தேர்தல் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது. மட்டுமல்லாது, இம்மாநிலத்தில் பழங்குடி மக்களின் வாக்குகளை பாஜக சிந்தாமல் சிதறாமல் பெறுவதிலும் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.

மற்ற மாநிலத்தை ஒப்பிடுகையில், ஜார்க்கண்ட் மாநிலத்தில் பழங்குடியினரின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. இது வாக்கு சதவிகிதத்திலும் பிரதிபலிக்கிறது. கடந்த 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இம்மாநிலத்தில் பழங்குடி மக்களின் எண்ணிக்கை 21.5% ஆக இருந்தது. இது கடந்த 20 ஆண்டுகளில் மேலும் அதிகரித்திருக்கும் என்று சொல்லப்படுகிறது.

ஆனால் இந்த வாக்குகளை சிதறாமல் பெறுவதில் பாஜக தினறி வருவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். என்னதான் சம்பாய் சோரனை பாஜக தன்வசப்படுத்தியிருந்தாலும், தற்போது வரை இந்து பழங்குடி மக்களைதான் பாஜக அங்கீகரித்து வருகிறது. அதாவது, இந்து பழங்குடியினர் மட்டும்தான் உன்மையான பழங்குடியினர் என்றும், கிறிஸ்தவ பழங்குடியினரை, பழங்குடியினர் பட்டியலிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்று பாஜகவின் அகில் பாரதிய வனவாசி கல்யாண் ஆசிரமம் கூறி வருகிறது.

இதற்காக போராடடங்களையும், பேரணிகளையும் இந்த அமைப்புகள் நடத்தியுள்ளன. மட்டுமல்லாது இன்றுவரை இந்த அமைப்புகள், பழங்குடி மக்களை, பழங்குடியினர் என்று அழைக்காமல் 'வனவாசிகள்' என்று அழைத்து வருகின்றன. வனவாசி எனில், காட்டில் வாழும் இந்துக்கள் என அர்த்தம் என்று இவ்வமைப்புகள் விளக்கமளித்துள்ளன.

இந்த அரசியல் கணக்குகளை எல்லாம் உணர்ந்த, ஹேமந்த் சோரனின் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி, பழங்குடியினர் இந்துக்கள் அல்ல என்கிற அரசியலை முன்னெடுத்து வருகிறது. பழங்குடியினர் எந்தவொரு ஒழுங்கமைக்கப்பட்ட மதத்திற்கும் எதிரானவர்கள் என்று சோரன் கூறியுள்ளார். மட்டுமல்லாது 'சர்னா குறியீடு' தொடர்பாக சட்டமன்றத்தில் தீமானம் ஒன்றையும் கடந்த 2021ம் ஆண்டு சோரன் நிறைவேற்றினார். இந்த தீர்மானம் பழங்குடியினரின் பழக்கவழக்கங்களை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கிறது.

இதற்கு பாஜக, ஆர்எஸ்எஸ் உள்ளிட்டவை ஒப்புக்கொள்ளவில்லை. இந்த தீர்மானம், பழங்குடியினரை பிளவுப்படுத்துவதாக இருப்பதாக கூறி எதிர்ப்பு தெரிவித்தன. அதேபோல இந்த தீர்மானத்திற்கு மத்திய அரசு இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை.

இதெல்லாம் இந்த தேர்தலில் பிரதிபலிக்கும் என்று சொல்லப்படுகிறது. முன்னதாக சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலில், ஜார்க்கண்ட் மாநிலத்தில் பழங்குடியினருக்கு என ஒதுக்கப்பட்டிருந்த 4 எம்பி சீட்களும் பாஜக தோல்வியடைந்திருந்தது. இது சட்டமன்ற தேர்தலிலும் பிரதிபலிக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+