மேகாலயா: என்பிபி ஆட்சி அமைக்க "ரெண்டு சீட் " பாஜக ஆதரவு! மீண்டும் முதல்வராகும் கான்ராட் சங்மா!
மேகாலயாவில் கூட்டணி ஆட்சி அமைய பாஜக ஆதரவு தெரிவித்துள்ளது.
ஷில்லாங்: மேகாலயா சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் தொங்கு சட்டசபை உருவாகி உள்ளது. இதனையடுத்து அதிக இடங்களைப் பெற்ற தேசிய மக்கள் கட்சியான என்பிபி மீண்டும் ஆட்சி அமைக்க ஆதரவு தருவதாக 2 இடங்களில் வென்ற பாஜக கடிதம் வழங்கி உள்ளது.

மேகாலயா மாநிலத்தில் மொத்தம் 60 தொகுதிகள் உள்ளன. இத்தொகுதிகளுக்கான தேர்தல் பிப்ரவரி 27-ல் நடைபெற்றது. இம்மாநிலத்தில் வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
மொத்த தொகுதிகள்: 60
தேர்தல் நடைபெற்றவை: 59
முடிவுகள் அறிவிக்கப்பட்டவை: 59
தேசிய மக்கள் கட்சி என்பிபி - 26
ஐக்கிய ஜனநாயக கட்சி யுடிபி - 11
காங்கிரஸ் - 5
திரிணாமுல் காங்கிரஸ் - 5
வாய்ஸ் ஆப் த பீப்பிள் பார்ட்டி - 4
பாஜக - 2
சுயேட்சைகள் - 2
ஹெச்எஸ்பிடிபி - 2
பிடிஎப் - 2
இம்மாநிலத்தில் ஆட்சி அமைக்க 31 இடங்கள் தேவை. ஆனால் எந்த கட்சிக்கும் பெரும்பான்மைக்கான 31 இடங்கள் கிடைக்கவில்லை. என்பிபி கட்சி மட்டும் தனிப்பெரும் கட்சியாக 26 இடங்களைப் பெற்றது. இதனையடுத்து 2 இடங்களில் வென்ற பாஜக உள்ளிட்ட இதர கட்சிகளின் ஆதரவை என்பிபி தலைவரான முதல்வர் கான்ராட் சங்மா கோரி இருந்தார். இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும் அவர் வேண்டுகோள் விடுத்திருந்தார். இதனையடுத்து 2 இடங்களில் மட்டும் வென்ற பாஜக, மேகாலயாவில் ஆட்சி அமைக்க ஆதரவு கடிதம் வழங்கி உள்ளது. இதனால் மேகாலயா மாநில கூட்டணி ஆட்சியிலும் பாஜக இணைந்து கொள்கிறது.
திரிபுராவில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை தக்க வைத்திருக்கிறது பாஜக. நாகாலாந்திலும் பாஜக கூட்டணி அமோக வெற்றியைப் பெற்று ஆட்சியைத் தக்க வைத்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications