திராவிட மண்ணில் பாஜகவின் 'சித்து வேலை' வெத்து வேட்டானது! காலூன்ற முடியாமல் தலை தெறிக்க ஓட்டம்!
வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் கோவாவில் செய்த சித்து வேலைகளை விந்திய மலைக்கு தெற்கேயுள்ள திராவிட பரப்பில் பாஜகவால் செய்ய முடியவில்லை.
Recommended Video

சென்னை: வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் கோவாவில் செய்த சித்து வேலைகளை விந்திய மலைக்கு தெற்கேயுள்ள திராவிட பரப்பில் பாஜகவால் செய்ய முடியவில்லை.
கர்நாடகாவில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பாஜக 104 இடங்களை கைப்பற்றியது. இதன் மூலம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது பாஜக.
இந்த அடிப்படையில் பாஜக கர்நாடகாவில் ஆட்சியமைத்தது. போதிய பெரும்பான்மை இல்லாத நிலையில் எடியூராப்பாவை முதல்வராக நியமித்து பதவி பிரமாணம் செய்து வைத்தார் ஆளுநர் வஜூபாய் வாலா.

ஜரூர் வேலை
முன்னதாக பாஜக பதவியேற்பை தடுக்க முடிவு செய்த காங்கிரஸ், மஜத தலைமையில் கூட்டணி அமைக்க சம்மதம் தெரிவித்தது. இதற்கான பணிகளில் ஜரூராக ஈடுபட்டன இரு கட்சிகளும்.

நம்பிக்கை வாக்கெடுப்பு
ஆனால் தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் கடந்த 17ஆம் தேதி கர்நாடக முதல்வராக பதவியேற்றார் எடியூரப்பா. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

சித்து வேலைகள்
ஆனால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும் முன்பே போதிய பெரும்பான்மை இல்லை என பதவியை ராஜினாமா செய்தார் எடியூரப்பா. வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் கோவாவில் செய்த சித்து வேலைகளை பாஜகவால் கர்நாடகாவில் செய்ய முடியவில்லை.

தட்டிப்பறித்த பாஜக
கடந்த ஆண்டு மணிப்பூர் மற்றும் கோவா சட்டசபை தேர்தல்களில் காங்கிரஸ் அதிக இடங்களை கைப்பற்றியது. ஆனால் அவர்களிடம் இருந்து ஆட்சியை தட்டிப் பறித்தது பாஜக.

திருப்பியடித்த காங்கிரஸ்
தனது சித்து வேலைகளை வைத்து ஒய்யாரமாக ஆட்சியில் அமர்ந்தது பாஜக. இந்நிலையில் கர்நாடகாவில் பாஜகவின் ஃபார்முலாவை வைத்தே திருப்பியடித்துள்ளது காங்கிரஸ்.
-
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன்












Click it and Unblock the Notifications