Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முக்கிய புள்ளிக்கு வாய்ப்பு மறுப்பு.. பீகார் தேர்தலுக்கு முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பாஜக

Subscribe to Oneindia Tamil

பாட்னா: பீகார் மாநிலத்தில் இன்னும் சில வாரங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. இதனால் அங்குத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இதற்கிடையே பாஜக அங்குத் தனது முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அங்கு 110 தொகுதிகளில் பாஜக போட்டியிடும் நிலையில், முதற்கட்ட லிஸ்டில் 71 வேட்பாளர்களின் விவரங்கள் இடம்பெற்றுள்ளது.

பீகாரில் இப்போது நிதிஷ்குமார் தலைமையிலான என்டிஏ கூட்டணி ஆட்சியில் இருக்கிறது. இதற்கிடையே அங்குச் சில வாரங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் பாஜக- ஜேடியு மற்றும் ஆர்ஜேடி- காங்கிரஸ் கூட்டணி இடையே தான் போட்டி நிலவுகிறது. தேர்தலுக்குச் சில காலமாக இருப்பதால் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை இறுதிக் கட்டத்தில் உள்ளது.

BJP Unveils First List of 71 Candidates for Bihar 2025 Polls Speaker Nand Kishore is not in the list

முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்

இதற்கிடையே பீகார் சட்டசபைத் தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக இன்று வெளியிட்டுள்ளது. இந்த முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் 71 தொகுதிகளுக்கான வேட்பாளர் விவரங்கள் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக பீகாரில் இரு துணை முதல்வர்களான சாம்ராட் சவுத்ரி மற்றும் விஜய் சின்ஹா ஆகியோர் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். சாம்ராட் சவுத்ரி தரப்பூர் தொகுதியிலும், விஜய் சின்ஹா லக்கிசராய் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

முக்கிய புள்ளிக்கு வாய்ப்பு மறுப்பு

அதேநேரம் பீகார் சபாநாயகரான நந்த கிஷோர் யாதவிற்கு இந்த முறை போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. பாஜகவின் முக்கிய உள்ளூர் தலைவரான அவர் 2010 முதல் பாட்னா சாஹிப் தொகுதியின் எம்எல்ஏவாக இருந்து வருகிறார்.. இருப்பினும், அவருக்கு போட்டியிட வாய்ப்பு தரப்படவில்லை. அவருக்குப் பதிலாக அந்தத் தொகுதியில் ரத்னேஷ் குஷ்வாஹா போட்டியிடுகிறார். மேலும், மூத்த தலைவர் ராம் கிருபால் யாதவ் டானாபூரில் களமிறங்குகிறார். முன்னாள் துணை முதல்வர் தர்கிஷோர் பிரசாத் கதிஹாரில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திடீர் குழப்பம்

பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியாகும் முன்பு அங்குத் திடீரெனக் குழப்பம் ஏற்பட்டிருந்தது. நேற்று முன்தினம் தொகுதிப் பங்கீடு இறுதியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், திடீரென பாஜக ஜேடியு இடையே குழப்பம் ஏற்பட்டது. இதனால் திட்டமிடப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பும் கூட கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது.

இதற்கிடையே என்டிஏ கூட்டணியின் இடப்பங்கீடு தொடர்பான குழப்பம் சுமுகப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்பட்டதாக சாம்ராட் சவுத்ரி அறிவித்திருந்தார்.. மேலும், எந்தக் கட்சி எந்தத் தொகுதியில் போட்டியிடும் என்பது குறித்த பேச்சுவார்த்தைகள் இறுதிக் கட்டத்தில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அவர் அறிவித்த சில மணி நேரத்திலேயே வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாஜக தொகுதிப் பங்கீடு

பீகாரில் மொத்தம் 243 தொகுதிகள் உள்ள நிலையில், அதில் பாஜகவும் ஜேடியு கட்சியும் தலா 101 தொகுதிகளில் போட்டியிடுகிறது. மறைந்த ராம் விலாஸ் பாஸ்வானின் மகன் சிராக் பாஸ்வான் தலைமையிலான லோக் ஜனசக்தி கட்சிக்கு (ராம் விலாஸ்) 29 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா மற்றும் இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா ஆகிய இரு கட்சிகளும் தலா 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

பீகார் தேர்தல்

பீகார் சட்டசபைக்கு வரும் நவம்பர் 6 மற்றும் 11 என இரு கட்டங்களாகச் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. முதல் கட்டத்தில் 121 தொகுதிகளில் தேர்தல் நடைபெறும் நிலையில், அதில் வேட்புமனு தாக்கல் செய்ய அக்டோபர் 17ம் தேதி கடைசி நாளாகும்.. அதேபோல இரண்டாம் கட்டத்தில் 122 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடக்கும் சூழலில், அதற்கு வேட்புமனு தாக்கல் செய்ய அக்டோபர் 20 கடைசித் தேதியாகும். அதைத் தொடர்ந்து நவம்பர் 14ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+