ரஜினி பாஜகவில் இணைந்தால் தென்னிந்தியாவில் கட்சி பலமடையும்- கிருஷ்ணம்ம ராஜூ
காக்கிநாடா: நடிகர் ரஜினிகாந்த் பாஜகவில் இணைந்தால் தென்னிந்தியாவில் கட்சி பலமடையும் என்று முன்னாள் மத்திய இணை அமைச்சரும், பிரபல தெலுங்கு நடிகருமான கிருஷ்ணம்ம ராஜு தெரிவித்தார்.
காக்கிநாடா தும்மலபேட்டாவில் நடைபெற்ற "தூய்மை இந்தியா" பிரச்சாரத்தில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்றார். மாநில சுகாதாரத் துறை அமைச்சர் காமினேநி ஸ்ரீநிவாசுலு, முன்னாள் மத்திய அமைச்சர் கிருஷ்ணம்ம ராஜு மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய கிருஷ்ணம்ம ராஜு, "நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என அவரது ரசிகர்கள் விரும்புகின்றனர். இத்தனை நாள் அவர் அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா? என்பது கேள்விக் குறியாக இருந்தது.
ஆனால் "லிங்கா" இசை வெளியீட்டு விழாவில் பேசிய அவர், அரசியலில் ஈடுபட பயமில்லை, தயக்கம்தான் உள்ளது என்று கூறியுள்ளார். இதன்மூலம் அவர் விரைவில் அரசியலுக்கு வருவார் என்றே எண்ணத் தோன்றுகிறது.
ரஜினி பாஜகவில் இணைய வேண்டும். அவர் பாஜகவில் இணைந்தால் தமிழகத்தில் மட்டுமின்றி, தென்னிந்தியா முழுவதும் கட்சி பலம்பெறும்" என்று கிருஷ்ணம்ம ராஜு தெரிவித்தார்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
Annamalai: பாஜகவிலிருந்து இன்று விலகுகிறாரா அண்ணாமலை? நிதின் நபினுடன் இன்று சந்திப்பு -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications